Tuesday, October 30, 2018

டீலா? நோ டீலா? DEAL? OR NO DEAL?

டீலா? நோ டீலா? DEAL? OR NO DEAL?
சம்பந்தர் அய்யா- சேர்! உங்களுக்கு பிரதமர் பதவி. எனக்கு எதாவது ஒரு பதவி மற்றும் சொகுசு பங்களா, வாகனம், அத்துடன் சிங்கள பொலிஸ் பாதுகாப்பு. என்ன டீலா? நோ டீலா? ஏன்னா இவை இல்லாமல் என்னால இருக்க முடியாது. பிளீஸ் புரிஞ்சுக்குங்க.
மகிந்த ராஜபக்ச – ஓகே பார்க்கலாம். மிஸ்டர் சம்பந்தன்.
சம்பந்தர் அய்யா- அப்புறம், அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்று அறிக்கை விடுவன். அதை நீங்க சீரியஸ்யாய் எடுத்துக் கொள்ளக்கூடாது சேர்!
மகிந்த ராஜபக்ச- இனி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்றத்தில் யாருக்கும் கிடைக்காது. அப்ப, எப்படி தீர்வு வரும் என்று அறிக்கை விட முடியும்? யாரும் நம்ப மாட்டாங்களே?
சம்பந்தர் அய்யா- அதைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம் சேர். அதை என் தம்பி சுமந்திரன் பார்த்துக் கொள்வார். "ஜயாவின் சாணக்கியம்" என்று அவர் ஒரு அறிக்கை விடுவார். உடனே அவரின் செம்பு ஒன்று "ஒப்பிரேசன் ஜயா" என்று ஆய்வுக் கட்டுரை எழுதும்.

No comments:

Post a Comment