Thursday, February 28, 2019

இந்திய அரசே! இந்திய வீரனுக்கு வந்தா ரத்தம்

இந்திய அரசே!
இந்திய வீரனுக்கு வந்தா ரத்தம்
தமிழனுக்கு வந்தா தக்காளி சட்னியா?
கைது செய்யப்பட்ட இந்திய வீரருக்கு முகத்தில் ரத்தம் வருகிறது. எனவே பாகிஸ்தான் சர்வதேச சட்டங்களை மதிக்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் சம்பந்தப்பட்ட இந்திய வீரர் தான் கொளரவமாக நடத்தப்படுவதாக காப்பி பருகிக்கொண்டு டிவிக்கு பேட்டி கொடுக்கிறார்.
எல்லைதாண்டி வந்த எதிரி நாட்டு ராணுவ வீரரைக்கூட கௌரவமாக நடத்த வேண்டும் என்று சர்வதேச சட்டம் கூறுகின்றது.
அதைத்தான் தற்போது இந்திய அரசும் பாகிஸ்தானிடம் கோருகின்றது.
கடந்த வாரம் ராஜஸ்தான் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆயள்தண்டனை கைதியான பாகிஸ்தான்காரர் ஒருவரை சக இந்திய சிறைவாசிகள் கொன்றுவிட்டதாக இந்திய அமைச்சர் கூறினார்.
சிறையில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான்காரர் ஒருவரையே பாதுகாக்க தவறிய இந்திய அரசு இப்போது எந்த முகத்துடன் தனது ராணுவ வீரரை கௌரவமாக நடத்தும்படி கோருகிறது?
சரி அதை விடுவம். இப்போது எமது கேள்வி என்னவென்றால் இந்த சர்வதேச சட்டம் எல்லாம் தமிழருக்கு இல்லையா?
பாகிஸ்தான் பிடித்து வைத்திருப்பது எல்லை தாண்டி வந்த எதிரி நாட்டு ராணுவ வீரர். ஆனால் இலங்கை அரசு கொன்றது தனது சொந்த நாட்டு சொந்த மக்களை.
இதோ தமிழ் இளைஞன் ஒருவன் ரத்தம் சிந்த உட்கார்ந்து இருக்கிறான். கடந்த 10 வருடமாக இந்த படம் இணைய தளங்களில் உலாவுகிறது.
ஆனால் இந்திய அரசோ அல்லது இன்று பாகிஸ்தான் சர்வதேச சட்டப்படி கௌரவமாக நடத்த வேண்டும் என்று கோரும் ஒருவர்கூட இந்த இளைஞனுக்காக குரல் கொடுக்கவில்லையே.
இந்திய அரசு இந்த இளைஞனுக்காக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மாறாக இந்த இளைஞனைக் கொன்றவர்களை ஜ.நா வில் பாதுகாத்து வருகின்றதே.
ஏனென்றால் இந்த இளைஞன் தமிழன் . தமிழன் என்றால் அவனை சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டியதில்லை.
அப்படித்தானே உங்கட நியாயம்?

No comments:

Post a Comment