• பொருளாதார ரீதியாக பெண்கள் ஆண்களை சார்ந்திருக்காத , பெண்ணடிமை முற்றாக ஒழியும் காலத்தில் உண்மையான காதல் மலரும். அப்போது பிப் 14 ம் திகதி மட்டுமல்ல 365 நாட்களும் காதலர் தினமே!
மாபெரும் மாக்சிய ஆசான் எங்கெல்ஸ் கூறுகிறார் “ஒரு புதிய தலைமுறை அதாவது தம் வாழ்நாள் முழுவதற்கும் தன்னிடம் ஒரு பெண்ணின் சரணாகதியைப் பணமோ வேறு எவ்விதமான சமூக அதிகாரமோ கொண்டு விலைக்கு வாங்காத ஆண்களினதும் உண்மையான காதலன்றி வேறு எந்தக் காரணத்ததுக்கும் தம்மை சரணளிக்காதவர்களும் பொருளாதார பின்விளைவுகளுக்கு அஞ்சி தம்மைத் தமது நேயத்திற்குரியோருக்கு அளிக்காதவர்களுமான பெண்களின் தலைமுறை வளர்ந்து வந்தபின்பு இப் பிரச்சனை தீர்வு பெறும். இத்தகைய மக்கள் உருவாகிய பின்னர் அவர்கள் என்ன செய்யலாம் என்று நாம் இன்று நினைப்பது பற்றி அவர்கள் துளியளவும் அக்கறைப்படமாட்டார்கள். அவர்கள் தமது சொந்த நடைமுறைகளையும் தங்கள் சொந்த பொது அபிப்பிராயங்களையும் உருவாக்கி ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட நடைமுறையுடன் நிறைவு காண்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் ஆண்களுடன் பூரண சமத்துவம் அனுபவிப்பர் என்பதில் ஜயமில்லை.”
No comments:
Post a Comment