Thursday, February 28, 2019

தனது ராணுவவீரனை சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டும் எனக் கோரும் இந்திய அரசு

•தனது ராணுவவீரனை சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டும் எனக் கோரும் இந்திய அரசு
இந்த சிறுவனை அதே சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டும் எனக் கோராதது ஏன்?
தனது நாட்டிற்குள் எல்லைதாண்டி வந்த இந்திய வீரரை சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டும் என இந்திய அரசு கோரியுள்ளது.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய வீரரை கௌரவமாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மக்களும் கேட்டுள்ளனர்.
அதன்படி கைது செய்யப்படட வீரரை பாகிஸ்தான் அரசு சர்வதேச சட்டப்படி கௌரவாக நடத்தி வருகிறது. அதனை சம்பந்தப்பட்ட அவ் வீரரும் காப்பி பருகியபடி பிபிசி தொலைக்காட்சியில் தெரிவிக்கிறார்.
ஆனால் இலங்கை அரசம் இந்திய அரசும் முள்ளிவாய்க்காலில் சரணடைந்த 40 000 தமிழ் மக்களை கொன்று குவித்தார்கள்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சர்வதேச சட்டத்திற்கு மாறாக சுட்டுக் கொன்றார்கள்.
குறிப்பாக பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுத்துவிட்டு சுட்டுக் கொன்றார்கள்.
சரணைடைந்த இசைப்பிரியா உட்பட பல பெண்களை சர்வதேச விதிகளுக்கு மாறாக பாலியல் வல்லறவு செய்து கொன்றார்கள்.
இதில் வேதனை என்னவெனில் இன்றும்கூட இப் படுகொலையாளிகளை ஜ.நா வில் இந்தியாவே பாதுகாத்து வருகிறது.
யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனால் சர்வதேச விதிகளை மீறிய இவ் இனப்படுகொலையாளிகளை விசாரணை செய்யக்கூட இலங்கை அரசு மறுத்து வருகிறது.
ஒருபுறம் சர்வதேச விதிகளை மீறிய இலங்கை அரசை ஆதரிக்கும் இந்திய அரசு மறுபுறம் பாகிஸ்தான் சர்வதேச விதிகளை மதிக்க வேண்டும் எனக் கோருகிறது.
எந்த முகத்துடன் இந்தியா இதனைக் கோருகிறது? அல்லது இதனைக் கோருவதற்கு இந்தியாவுக்கு தகுதி இருக்கிறதா?

No comments:

Post a Comment