இருவரும் தமிழர்கள்
இருவரும் தமிழ் உணர்வு மிக்கவர்கள்
இருவரும் தமிழ் தேசியத்திற்காய் உழைக்கிறார்கள்
இருவரும் இதற்காக பல வழக்குகளை சந்தித்து வருகிறார்கள்
இருவரும் பல வருடங்கள் சிறைக் கொடுமையை அனுபவித்திருக்கிறார்கள்.
ஒருவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
இன்னொருவர் தமிழ்தேச மக்கள் கட்சி தலைவர் தமிழ்நேயன்
சீமான் இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறார்.
அவர் ஒருபுறம் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட புலிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறார்.
இன்னொருபுறம் புலிகளைக் கொன்ற இந்திய ராணுவத்திற்கும் வீர வணக்கம் செலுத்துகிறார்.
ஆனால் தமிழ்நேயன் இறந்த இந்திய ராணுவத்திற்கு தன்னால் அஞ்சலி செலுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.
ஏன் என்று கேட்டதற்கு “ நான் இந்தியன் அல்ல. காஸ்மீரில் கொல்லப்பட்டவன் இந்தியன். அவனுக்கு நான் எப்படி வருத்தப்பட முடியும்? ஈழத்தில் கொல்லப்பட்டவன் தமிழன். கொலை செய்தவன் இந்தியன். நான் எப்படி இந்தியனாக இருக்க முடியும்?” என்று கேட்டுள்ளார்.
சீமான் இந்திய ராணவத்திற்கு வீர வணக்கம் செலுத்துவதற்கும் தமிழ்நேயன் மறுப்பதற்கும் என்ன காரணம்?
சீமான் தேர்தல் பாதையில் பயணிப்பதும் தமிழ்நேயன் தேர்தல் பாதையை நிராகரித்து தோழர் தமிழரசன் பாதையில் பயணிப்பதுமே காரணமாகும்.
ஈழத்தில் இருந்து இந்திய ராணுவம் திரும்பி வந்தபோது ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி வரவேற்க மறுத்துவிட்டார்.
எமது தமிழ் மக்களை கொன்ற ராணுவத்தை நான் எப்படி வரவேற்க முடியும் என்று கேட்டார்.
அதேபோன்று ஈழத்தில் இருந்து கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் உடல்கள் தமிழகம் வந்தபோது தமிழகத்தில் கட்சிகளோ அல்லது தலைவர்களோ வீர வணக்கம் செலுத்தவில்லை.
ஈழத்தில் இந்திய ராணுவம் என்ன கொடுமைகளை செய்ததோ அதையேதான் இன்று காஸ்மீரில் செய்கிறது.
ஆனால் காஸ்மீரில் இறநத இந்திய ராணுவத்திற்கு தமிழகத்தில் அதுவும் தமிழ்தேசியம் பேசுபவர்கள் வீர வணக்கம் செலுத்துவது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
குறிப்பு- ராணுவம் அரசின் வன்முறைக் கருவி. நாளை தமிழகத்திலும் இதே ராணுவத்தை பயன்படுத்தியே இந்திய அரசு அடக்குமுறைகளை செய்யப்போகிறது.
No comments:
Post a Comment