Thursday, February 28, 2019

•சம்பந்தர் அய்யாவை எதை சொல்லி வாழ்த்துவது?

•சம்பந்தர் அய்யாவை
எதை சொல்லி வாழ்த்துவது?
சம்பந்தர் அய்யாவின் 86வது பிறந்தநாள் இன்று ஆகும்.
காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. மற்றவர் உதவி இன்றி எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. ஆனாலும் பதவியை விட்டு ஒதுங்க இன்னும் மனம் வரவில்லை.
வவுனியாவில் பெண்கள் உருவப் பொம்மையை எரித்தார்கள். கிளிநொச்சியில் மண்ணை வாரி எறிந்து தூற்றினார்கள். யாழ்ப்பாணத்தில் செத்துப்போ எனத் திட்டித் தீர்த்தார்கள்.
ஆனாலும் கொஞ்சம்கூட வெட்கமின்றி பதவியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.
இலங்கை வரலாற்றில் ஒருவர் வாழும்போதே செத்து தொலை என்று மக்களால் தூற்றப்பட்ட ஒரே தலைவர் நான் அறிந்த வரையில் சம்பந்தர் அய்யா ஒருவர் மட்டுமே.
ஒருவர் எத்தனை தவறு செய்திருந்தாலும் அவரது மரணம் அவர் தவறுகளை மன்னித்துவுpடும் என்பார்கள். ஆனால் மரணம்கூட சம்பந்தர் அய்யாவுக்கு மன்னிப்பை பெற்று தரப்போவதில்லை.
ஒவ்வொரு தீபாவளிக்கும் அடுத்த வருடம் தீர்வு வந்துவிடும் என்று கொஞ்சம்கூட கூச்சமின்றி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். சோத்தில் கொஞ்சமாவது உப்பு போட்டு தின்பவராக இருந்தால் கூறியபடி தீர்வு பெற்று தந்திருக்க வேண்டும். இல்லையேல் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு மனிதரை என்ன சொல்லி வாழ்த்துவது?

No comments:

Post a Comment