Thursday, February 28, 2019

இசைப்பிரியா பயங்கரவாதியாம்

இசைப்பிரியா பயங்கரவாதியாம்
புலிகள்தான் இசைப்பிரியா என்று பெயர் வைத்தார்களாம்
ராணுவம் இசைப்பிரியாவை கொல்லவில்லை என்கிறார்கள்
அப்படியென்றால் ராணவத்திடம் உயிருடன் சரணடைந்த இசைப்பிரியா எப்படி இறந்தார்?
தன்னைத்தானே பாலியல் வல்லுறவு செய்துகொண்டாரா?
தன்னைத்தானே கொன்று இறந்துவிட்டாரா?
சரி அப்படியென்றால் ஏன் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?
அல்லது நீங்களே உள்நாட்டு விசாரணையாவது செய்து நீதி வழங்கியிருக்கலாமே?
யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது. என்னத்தை இதுவரை கிழித்துள்ளீர்கள்?
இலங்கை ராணுவம் புனிதமானது. அது எந்தவித குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்கிறார் மகிந்த ராஜபக்ச
அவருக்கு ஒருவிடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
அவருடைய மாத்தறை நகரில் ஒரு பெண் சிலை இருக்கிறது. அதையே அவர் ஒவ்வொருமுறையும் கடந்து கொழும்புக்கு வருகிறார்.
அது மன்னம்பேரி என்னும் சிங்கள யுவதியின் சிலை. 1971ம் ஆண்டு ஜேவிபி இயக்கத்தை சேர்ந்தவர் என்று சொல்லி ராணுவத்தால் கொல்லப்பட்டவர்.
அவரை கொலை செய்தது மகிந்தராஜபக்ச அங்கம் வகித்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசே.
அப்போதும் மன்னம்பேரி போன்றவர்களை கொலை செய்ய உதவி செய்தது இந்திராகாந்தி அனுப்பி வைத்த இந்திய ராணுவமே.
மன்னம்பேரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஜேவிபி யினருக்கு ஆடைகள் தைத்து கொடுத்தார் என்பதே
.
மன்னம்பேரியை கைது செய்த ராணுவத்தினர் அவரை கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தனர். அவரை சித்திரவதை செய்தனர்.
பின்னர் அவரை நிர்வாணமாக்கி மக்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
இறுதியாக மக்கள் முன்னிலையில் அவரை சுட்டு விட்டு அருகில் இருந்த ஊரவர் ஒருவரிடம் பணம் கொடுத்து மன்னம்பேரியை புதைக்கும்படி கூறியுள்ளனர்.
மன்னம்பேரியை புதைக்க முயன்றவர் அவர் இறக்கவில்லை என்பதையும் அவர் தண்ணீர் கேட்டு அழுவதையும் கண்டார்.
அவர் இதனை ராணுவத்திடம் சென்று கூறியுள்ளார். உடனே மீண்டும் வந்த ராணவத்தினர் மீண்டும் மன்னம்பேரியை சுட்டுக் கொன்றனர்.
காலம் மாறியது. சிங்கள மக்கள் மௌனமாக இருந்துவிடவில்லை. மன்னம்பேரிக்காக நீதி கோரினார்கள்.
மன்னம்பேரியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தமைக்காக சில ராணுவத்தினர் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டார்கள்.
அதுமட்டுமல்ல படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் மன்னம்பேரிக்கு சிலை வைத்துள்ளனர் சிங்கள மக்கள்.
ஒரு சிங்கள யுவதியையே பாலியல் வல்லுறவு செய்த இலங்ரைக ராணுவம் தமிழ் பெண் இசைப்பிரியாவை எதுவும் செய்யவில்லை என்று மகிந்த ராஜபக்ச எந்த முகத்துடன் கூறகிறார்?
ஆனால் இங்கு தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மன்னம்பேரிக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது இசைப்பிரியாவுக்கு ஏன் வழங்கப்பட வில்லை என்பதையே.
ஏனெனில் மன்னம்பேரி சிங்கள யுவதி. இசைப்பிரியா தமிழ் யுவதி என்பது மட்டுமல்ல மன்னம்பேரியின் விசாரணைக்கு துரோகம் செய்ய சிங்களவர்களில் சுமந்திரன்கள் இருக்கவில்லை.

No comments:

Post a Comment