Thursday, February 28, 2019

கடந்த எட்டு நாட்களாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

கடந்த எட்டு நாட்களாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்
இப்போது முருகனுடன் நளினியும் இரண்டு நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார்
தாய் தந்தையரின் நிலை தெரியாமல் இவர்களின் மகள் லண்டனில் கவலையில் உள்ளார்.
அதேவேளை அற்புதம்மாள் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஏழு தமிழர் விடுதலைக்கு ஆதரவு கேட்டு மக்களை சந்தித்து வருகிறார்.
ஆனால் முடிவு தெரிவிக்க வேண்டிய ஆளுநரோ எவ்வித அக்கறையும் இன்றி மௌனமாக இருக்கிறார்.
கிடுகு பொட்டுக்களால் பெண்கள் குளிப்பதை பார்வையிடும் ஆளுநரின் கண்களுக்கு இவர்கள் உண்ணாவிரதம் இருப்பது தெரியவில்லை.
பேராசிரியை நிர்மலாவின் குரல் கேட்கும் ஆளுநரின் காதுகளுக்கு அற்புதம்மாளின் குரல் கேட்பதில்லை.
ஆளுநரோ ,
உச்ச நீதிமன்றத்தை மதிக்கவில்லை
தமிழக அரசின் மனுவை மதிக்கவில்லை
மொத்தத்தில் தமிழக மக்களையே மதிக்கவில்லை.
ஆனாலும் இதை தட்டிக்கேட்க வேண்டிய கட்சிகளோ தேர்தல் கூட்டில்தான் கவனம் செலுத்துகின்றன.
தமிழக அரசோ ஆளுநருக்கும் பிரதமருக்கும் குனிந்து கிடப்பதையே கடமையாக கருதுகின்றன.
தேர்தலுக்காக விடுதலையை தாமதம் செய்வதாக சிலர் சமாளிக்க முயலுகின்றனகர்.
குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மக்கள் இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழாதவரை இவர்களின் விடுதலை ஒருபோதும் நிகழாது.

No comments:

Post a Comment