Thursday, February 28, 2019

அற்புதம்மாள் பெயர் மட்டுமல்ல அவர் வாழ்வும் அற்புதமே!

•அற்புதம்மாள்
பெயர் மட்டுமல்ல அவர் வாழ்வும் அற்புதமே!
28 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்
தனது மகனின் விடுதலைக்காக 28 வருடங்களாக ஓயாமல் நடக்கிறார். இப்போது தமிழக மக்களை நம்பி அவர்களின் ஆதரவு கேட்டு வருகிறார்.
மகனுடன்தான் வீடு திரும்புவேன் இல்லையேல் என் பிணம்தான் வீடு திரும்பும் என்று கூறி நடக்கிறார்.
தள்ளாத வயதிலும் கடைசி சில நாட்களையாவது தன் மகனுடன் கழித்துவிட வேண்டும் என்ற ஆவலில் நம்பிக்கையுடன் நடக்கிறார்.
நான் பல தடவை ரஸ்சிய நாவலான “தாய்” நாவலை படித்திருக்கிறேன். அதில் வரும் தாய் போன்று எம் தமிழ் மக்கள் மத்தியில் ஏன் ஒரு தாய் இல்லை என்று ஏங்கியிருக்கிறேன்.
ஆனால் அற்புதம்மாள் வரலாற்றை அறிந்த பின்புதான் எனக்கு தெரிந்தது எம் மத்தியிலும் அற்புதமான தாய் உண்டு என்று.
ஆனால் அதை எழுதுவதற்கு ரஸ்சிய தாய் நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கி போன்ற எழுத்தாளர் எம் மத்தியில் இல்லை என்று.
கார்க்கி கூறகிறார் “கலகம் செய்ய துணிந்தவனுக்கு உதவுவதே இலக்கியத்தின் பணி” என்று. அதனால்தான் அவரால் தாய் போன்ற அற்புதமான நாவலை படைக்க முடிந்தது.
ஆனால் எமது தமிழ் இலக்கிய ஜம்பவான் என்ற ஜெயமோகன் கூறுகிறார் “ ஈழத்தில் நடந்தது இன அழிப்பு இல்லை. அது ஒரு ஆயுத குழுவை அரசு செய்த வெறும் அழிப்பே” என்று.
இப்படிப்பட்டவர்கள் தமிழ் இலக்கியவாதிகள் என்று இருக்கும்வரை எப்படி எம் தாய் அற்புதம்மாள் இலக்கியமாக வரலாற்றில் வர முடியும்?
விசாரித்துவிட்டு உடன் அனுப்பிவிடுகிறோம் என்று பேரறிவாளனை கூட்டிச் சென்றவர்கள் 28 வருடமாக இன்னும் விடவில்லை.
சட்டம் விடுதலை செய்யும் என்று நம்பினார். ஆனால் நடக்கவில்லை
உச்சநீதிமன்றம் விடுதலை செய்யும் என நம்பினார். ஆனால் நடக்கவில்லை.
தமிழக அரசு விடுதலை செய்யும் என நம்பினார். ஆனால் நடக்கவில்லை.
ஆளநர் விடுதலை செய்வார் என நம்பினார். ஆனால் நடக்கவில்லை.
பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றி எழுதினேன் என்று விசாரணை செய்த அதிகாரியே கூறிய பின்பும்கூட விடுதலை செய்யப்படவில்லை.
எனவேதான் Nவுற வழியின் மக்களை நம்பி அந்த வயதான தாய் நம்பிக்கையுடன் வருகிறார்.
ஆம். தமிழக மக்களால் மட்டுமே பேரறிவாளனை விடுதலை செய்ய முடியும்.

No comments:

Post a Comment