Tuesday, February 28, 2017

•13வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்!

•13வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்!
தமது சொந்த நிலங்களை திருப்பி தரக்கோரி கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 13வது நாளாக தொடருகிறது.
அந்த மக்களின் அமைதி வழியிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மட்டுநகரில் மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
லண்டனில் இன்று பிரதமர் இல்லம் முன்பு தமிழ் மக்கள் ஒன்றுகூடி கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. 30 மாகாண சபை உறுப்பினர்கள் உண்டு. 200 க்கு மேற்பட்ட பிரதேசபை உறுப்பினர்கள் உண்டு.
ஆனால் இதில் ஒரு உறுப்பினர்கூட அந்த மக்களுக்கு தலைமை ஏற்று போராட்டத்தில் வழி காட்ட முன்வரவில்லை.
13 இரவுகள் பெண்கள் குழந்தைகள் முகாம் வேலியோரம் படுத்து உறங்கி வருகின்றனர். இரவில் ராணுவம் மின்சாரத்தை நிறுத்தி மிரட்டுகிறது. ஆனால் ஒரு தமிழ் பிரதிநிதியும் இந்த மக்களுடன் ஒரு இரவுகூட தங்க முன்வரவில்லை.
இந்த மக்களின் வாக்கு வேண்டும். அதன் மூலம் பதவி வேண்டும். சொகுசு வாகனம் வேண்டும். ஆனால் அந்த மக்களுடன் சேர்ந்து போராட தயாரில்லை.
சிங்கள மக்கள்கூட இந்த மக்களுக்காக இரங்குகிறார்கள். நீர்கொழும்பில் சிங்கள மக்கள் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்கள்.
ஆனால் தமிழ் பிரதிநிதிகளுக்கு இந்த மக்களுக்காக போராட இன்னும் மனம் வரவில்லை.
அடுத்த தேர்தலுக்கு எந்த முகத்துடன் இந்த மக்களிடம் வாக்கு கேட்க வருவார்கள்?

No comments:

Post a Comment