Saturday, February 11, 2017

•மற்றவர்களின் சுதந்திரத்தை மறுப்பவர்கள் தாம் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது!

•மற்றவர்களின் சுதந்திரத்தை மறுப்பவர்கள்
தாம் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது!
தமிழர்களின் சுதந்திரத்தை மறுத்துவிட்டு சிங்களவர்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது.
சிங்களவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பினால் தமிழர்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பது தவிர்க்க முடியாதது.
நடந்து முடிந்த யுத்தத்தில் தமிழ் மக்களும் சரி சிங்கள மக்களும் சரி எந்த நன்மையும் பெறவில்லை
மாறாக யுத்தத்தினால் நன்மை பெற்றது இந்தியா ஒன்று மட்டுமே. இன்று இந்தியாவின் அறிவிக்கப்படாத 30வது மாநிலமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட அதேயளவு நிதி இப்போதும் ராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது.
இலங்கையில் எல்லையில் எந்த எதிரி நாடும் இல்லை. இலங்கைக்கு இந்தளவு பெரிய ராணுவமே தேவையும் இல்லை.
மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் ராணுவத்திற்கு 32 சதவீத நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.
யுத்தத்திற்கு 200 பில்லியன் டொலர்களை செலவு செய்த இலங்கை அரசு இன்று மக்களுக்கு செலவு செய்ய பணம் இல்லை என்று கூறுகிறது.
இலங்கையின் இன்றைய கடன் தொகை 64.9 பில்லியன் டாலர். வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகப்பெரிய கடன் தொகை மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதேவேளை தலா ஆறு கோடி ரூபா பெறுமதியான 700 சொகுசு வாகனங்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்து 69 வருடம் நிறைவு பெற்றுவிட்டது என்கிறார்கள். ஆனால் இதற்கிடையில் தமிழ் சிங்கள மக்களின் மூன்று ஆயுதப் போராட்டங்களை இலங்கை சந்தித்துள்ளது.
அதாவது பாதிக்காலம் சுமார் 35 வருடம் ஆயுதப் போராட்டமாகவே கழிந்துள்ளது. இதனால் தமிழரில் 2 லட்சமும் சிங்களவரில் 1 லட்சம் என சுமார் 3 லட்சம் மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்னர்.
இன்று இலங்கையில் ஒருபுறத்தில் சுதந்திரதினம் கொண்டாடப்படும் அதேவேளை இன்னொரு புறம் கரி நாளாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மட்டுமல்ல லண்டனில் நோர்வேயில் என உலகின் பல நாடுகளிலும் தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக இன்று போராடியுள்ளனர்.
தமிழ் மக்கள் தமது சுதந்திரத்தை பெறும்வரை அவர்களது போராட்டம் தொடரும்.

No comments:

Post a Comment