Saturday, February 11, 2017

•மாதராய் பிறந்திட மாதவம் புரிந்திட வேண்டும்

•மாதராய் பிறந்திட மாதவம் புரிந்திட வேண்டும் என்று பாடிய நாட்டில்
ஒவ்வொரு நாளும் 92 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகின்றனர்!
அதிகளவு பெண் தெய்வங்களைக் கொண்ட இந்துமதம் உள்ள இந்தியாவில்தான் ஒவ்வொரு நாளும் 92 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்படுகின்றனர்.
பிரதமராகவும், முதலமைச்சராகவும் பல பெண்கள் ஆட்சி செய்த இந்தியாவில்தான் ஒவ்வொரு வருடமும் 33580 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்படுகின்றனர்.
புரட்சி தலைவி ஜெயா அம்மையார் ஆட்சி செய்த தமிழகத்தில்தான் நந்தினி என்ற பெண் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டிருக்கிறார்.
இந்துமுன்னனி தலைவர் ஒருவரால் நந்தினி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது மட்டுமன்றி அவரது பெண் உறுப்பை பிளேட்டால் வெட்டி 5மாத சிசுவை எடுத்து வீசியும் உள்ளார்.
அடுத்து சசிகலா என்ற பெண் முதலமைச்சராக வரவுள்ள நிலையில் தாம்பரம் அருகில் ஹாசினி என்ற குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்பு எல்லாம் இந்திய ராணுவம் அப்பாவி பெண்களையே பாலியல் வல்லறவு செய்து வந்தது. இப்போது தனது சக பெண் ராணு வீரரையே அது பாலியல் வல்லுறவு செய்ய ஆரம்பித்துவிட்டது.
அண்மையில் ஒரு பெண் ராணு வீரர் தனது உயர் அதிகாரி ஒருவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமையினால் தற்கொலை செய்துள்ளார் என செய்தி வந்துள்ளது.
இந்தியாவில் பசு மாட்டிற்காகக்ககூட குரல் கொடுக்க ஒரு பிரதமர் இருக்கிறார். ஆனால் பாவம் பெண்கள், அவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை.
2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் பாலியல் வல்லுறவில் வல்லரசு ஆவதற்குரிய தகுதியே இந்தியாவிடம் உள்ளது.

No comments:

Post a Comment