Saturday, February 11, 2017

•வாக்கு போட்ட மக்களும் பதவி பெற்ற தலைவரும்!

•வாக்கு போட்ட மக்களும்
பதவி பெற்ற தலைவரும்!
ஒரு வருடத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவேன் என தேர்தலில் வாக்குறுதியளித்திருந்தார் தலைவர் சம்பந்தர் அய்யா.
தமிழ் மக்களும் அவரது வாக்குறுதியை நம்பி அவருக்கு வாக்களித்து வெற்;றி பெற வைத்தனர்.
வெற்றி பெற்ற சம்பந்தர் அய்யா எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக் கொண்டார். ஆனால் வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை.
ஒரு வருடத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. மாறாக சம்பந்தர் அய்யாவுக்கு பதவியும் சொகுசு பங்களாவும் கிடைத்துள்ளது.
கடந்தவாரம் வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகள் 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை சென்று பார்க்கவோ ஆறுதல் வார்த்தை கூறவோ சம்பந்தர் அய்யா முயலவில்லை.
இப்போது கேப்பிலாபுலவு மக்கள் 3 நாட்களாக தமது காணிகளை ஒப்படைக்குமாறு கோரி போராடி வருகின்றனர். இவர்களை சந்திப்பதற்கோ அல்லது இவர்களது பிரச்னைகளை தீர்ப்பதற்கோ சம்பந்தர் அய்யா விரும்பவில்லை.
அவர் திருகோணமலையில் தனது காளி கோயில் கட்டவும் அதற்கு கும்பாபிசேகம் நடத்துவதற்குமே விரும்புகிறார்.
கோயில் விழாவில் கலந்து கொள்ள நேரம் ஒதுக்கும் தலைவர் சம்பந்தர் அய்யாவால் தமக்கு வாக்கு போட்ட மக்களின் குறைகளைக் கேட்பதற்குகூட நேரம் ஒதுக்க முடியவில்லை.
தமிழ் மக்கள் பனியிலும் குளிரிலும் போராடுகின்றனர். ஆனால் அவர்களின் வாக்கில் பதவி பெற்ற தலைவர் சம்பந்தர் அய்யா சொகுசு பங்களாவில் நிம்மதியாக தூங்குகிறார்.
என்னே கேவலம் இது?
இப்படி ஒரு அவல நிலை தமிழ் இனத்திற்கு என்றுமே வந்ததில்லை.

No comments:

Post a Comment