Saturday, February 11, 2017

•அடக்குமுறை இருக்கும்வரை அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும்!

•அடக்குமுறை இருக்கும்வரை அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும்!
“பொங்கல் விழா” என்று சம்பந்தர் அய்யா அழைத்தபோது வராத கூட்டம் “எழுக தமிழ்” என்றவுடன் ஆயிரக்கணக்கில் திரண்டது எதைக் காட்டுகிறது?
எத்தனை தடைகள் போட்டபோதும் அத்தனை தடைகளையும் தாண்டி தமிழ் மக்கள் திரண்டு வந்தது எதைக் காட்டுகிறது?
தலைவர் இல்லை. கட்சி இல்லை. இருந்தும் தமிழ் மக்கள் தாமாக எழுந்து வந்தது எதைக் காட்டுகிறது?
முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 40ஆயிரம் மக்களை கொன்று குவித்த பின்னரும் இத்தனை குறுகிய காலத்தில் தமிழ் இனம் மீண்டும் எழுந்து நிற்பது எதைக் காட்டுகிறது?
அடக்குமுறை இருக்கும்வரை அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்கும்?
விதைத்தவன் உறங்கலாம். ஆனால் விதைகள் உறங்குவதில்லை.
ஆம். தலைமைகள் தயங்கினாலும் தமிழ் மக்கள் போராட தயங்கமாட்டார்கள்.
இதுவே தமிழ் மக்கள் உலகிற்கு உரத்துச் சொல்லியுள்ள சேதியாகும்.

No comments:

Post a Comment