Saturday, February 11, 2017

•மயங்கி விழுந்த டாக்டரும் அங்கோடைக்கு அனுப்பப்பட்ட சுமந்திரனின் தொண்டரும்.

•மயங்கி விழுந்த டாக்டரும்
அங்கோடைக்கு அனுப்பப்பட்ட சுமந்திரனின் தொண்டரும்.
கடந்த தேர்தலின்போது தமிழ்தேசியகூட்டமைப்பும் தானும் வெற்றியீட்டியமைக்காக யாழ்நகரில் தமது தொண்டர்களுக்கு மாபெரும் தண்ணிப் பார்ட்டி ஒன்றை சுமந்திரன் வழங்கியிருந்தார்.
அதில் அதிகளவு தண்ணியை உட்கொண்ட அவரின் தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவர் இத்தனை நாளும் யாழ் மருத்துவமனையில் கோமா நிலையில இருந்;தாh.
சுமார் 15 மாதங்களின் பின்னர் திடீரென கண்முழித்த அந்த அப்பாவி தொண்டர் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் பின்வரும் கேள்விகளை கேட்டார்.
(1) என் தலைவர் சம்பந்தர் அய்யா வாக்குறுயளித்தபடி பெற்றுத் தந்த தீர்வில் தமிழ் மக்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்களா?
(2) எம் தளபதி சுமந்திரன் கூறியபடி சிறையில் உள்ள அனைவரும் விடுதலையாகி தமது குடும்பத்தினருடன் மகிழ்சியாக உள்ளனரா?
(3) எமது ஈழத்து சேகுவாரா மாவை சேனாதிராசா சொன்னபடி இடம் பெயர்ந்தவர்கள் எல்லோரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டனரா?
(4) எமது வன்னி மாவீரன் சிறீதரன் யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுவில் இருந்து குடிநீர் தந்துவிட்டாரா?
(5) எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது குடும்பங்களை தமது சொந்த தொகுதியில்தானே இப்போது குடியமர்த்தியுள்ளனர்?
(6) சிங்கள ராணுவம் அற்ற எமது தலைவர்களின் ஆட்சியில் மக்கள் சந்தோசமாக வாழும் அந்த இனிய காட்சியை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். என்னை உடனே அனுமதிப்பீர்களா டாக்டர்?
இந்த கேள்விகளைக் கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் டாக்டர் மயங்கி விழுந்தவிட்டார். அவர் இப்போது அதே மருத்துவமனையில் கோமாவில் இருக்கிறார்.
கேள்வி கேட்ட தொண்டர் ஒரு மெண்டல் நோயாளி என்று சுமந்திரன் எம்.பி யின் சிபாரிசின் பேரில் அங்கோடை விசர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
குறிப்பு- இது ஜோக் அல்ல. தனக்கு வாக்கு போட்டவர்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு இவ்வாறுதான் ஆக்கியுள்ளது என்பதே உண்மை.

No comments:

Post a Comment