Saturday, February 11, 2017

•போராட்டம் ஒருபோதும் தோற்பதில்லை!

•போராட்டம் ஒருபோதும் தோற்பதில்லை!
போராட்டம் வெற்றி பெற ஒருவேளை தாமதமாகலாம். ஆனால் போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை.
போராடாத எந்த இனமும் வெற்றி பெற்றதில்லை. போராடிய எந்த இனமும் வெற்றி பெறாமல் விட்டதில்லை.
கேப்பாப்பிலவு மக்களின் நிலத்திற்கான போராட்டமும் வெற்றி பெறும் வரை தொடர்வது உறுதி.
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் சனிக்கிழமை 11.02.17யன்று யாழ்ப்பாணத்தில் மக்கள் ஒன்றுகூடவுள்ளார்கள்.
அதன் பின்னர் அவர்கள் கேப்பாப்பிலவிற்கு ஊர்வலமாக வந்து அம் மக்களுக்கு நேரில் தமது ஆதரவை தெரிவிக்கவுள்ளார்கள்.
பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் 10.02.2017 யன்று பிரானஸ்; பாராளுமன்ற முன்றலில் கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவுள்ளனர்.
லண்டன் வாழ் தமிழ் மக்கள் 12.02.17யன்று பிரிட்டன் பிரதமர் இல்லத்திற்கு முன்னால் ஒன்றுதிரண்டு கேப்பாப்பிலவு மக்களுக்கு தமது ஆதரவினை தெரிவிக்கவுள்ளார்கள்.
கனடா நோர்வே நாடுகளிலும் இதேபோன்ற ஆதரவுக் குரல்கள் கொடுப்பதற்கான எற்பாடுகள் நடைபெறுவதாக அறியவருகிறது.
வெறும் 84 குடும்பங்டகளுடன் ஆரம்பித்த போராட்டம் இன்று பல நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பரவ ஆரம்டபித்துவிட்டது.
தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியிலும் இந்த கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு அதரவு தோன்ற ஆரம்பித்துள்ளது.
மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை கேப்பாப்பிலவு மக்களன் நிரூபித்து காட்டுகிறார்கள்.
தமிழ் இனத்தின் போராட்ட வரலாற்றில் கேப்பாப்பிலவும் இடம் பிடித்துவிட்டது.

No comments:

Post a Comment