Tuesday, February 28, 2017

•தொடரும் போராட்டம் பெருகும் மக்கள் ஆதரவு மீண்டும் சுமந்திரன் துரோகம்!

•தொடரும் போராட்டம்
பெருகும் மக்கள் ஆதரவு
மீண்டும் சுமந்திரன் துரோகம்!
தமது சொந்த நிலத்தை ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 13வது நாளாக தொடர்கிறது.
அந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக சிங்கள முஸ்லிம் மக்களும் தமது ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள்.
புத்தளம் முஸ்லிம் மாதர் அமைப்பினர் கேப்பாப்ப்pலவிற்கு நேரில் வந்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
காலியில் இருந்து சிங்கள அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் விரைவில் கேப்பாப்பிலவிற்கு வந்து தமது அதரவினை தெரிவிக்கவுள்ளார்கள்.
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் ஆதரவையும் பெற்ற போராட்டமாக மாறிவருகிறது.
இந்நிலையில் “பிரதமருடன் பேசியிருந்தால் இந்த பிரச்சனை எப்பவோ தீர்ந்திருக்கும்” என்று சுமந்திரன் மட்டும் கேப்பாப்பிலவு மக்கள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.
முதலாவது, காணாமல் போனோர் தொடர்பாக அவர்களின் உறவுகள் பிரதமருடன் பேசியும் இன்னும் பிரச்சனை தீரவில்லை. எனவே பிரதமருடன் பேசியிருந்தால் கேப்பாப்பிலவு பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று சுமந்திரன் எப்படி நம்புகிறார்?
இரண்டாவது, பிரதமருடன் பேசுவதற்காகத்தானே சுமந்திரனை எம்.பி யாக மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஏன் இதுவரை சுமந்திரன் பிரதமருடன் இது பற்றி பேசவில்லை?
தன் மீது தவறை வைத்துக்கொண்டு சுமந்திரன் எதற்காக போராடும் மக்கள் மீது குற்றம் சுமத்துகிறார்?
13 நாளாக மக்கள் போராடுகின்றனர். இதுவரை எந்தவித அக்கறையும் எடுக்காத பிரதமரை பேசியிருந்தால் தீhத்திருப்பார் என்று எதற்காக சுமந்திரன் காப்பாற்ற முயல்கிறார்?
தமது சொந்த நலன்களுக்காக இன்னும் எத்தனை மக்கள் போராட்டங்களை சுமந்திரன் இப்படி காட்டிக் கொடுக்கப் போகிறார்?
புதுக்குடியிருப்பிலும் மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கும் நல்லாட்சி அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
எனவே அவர்கள் இனி சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.
இங்கு எமக்கு எழும் கேள்வி என்னவெனில் இந்த புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு என்னத்தைக் கூறி சுமந்திரன் காட்டிக் கொடுக்கப் போகிறார் என்பதே!

No comments:

Post a Comment