Saturday, February 11, 2017

•சம்பந்தர் அய்யாவை என்ன சொல்லி வாழ்த்துவது?

•சம்பந்தர் அய்யாவை என்ன சொல்லி வாழ்த்துவது?
இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடும் சம்பந்தர் அய்யாவை என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்று சொல்லிவிட்டு தமிழ் மக்களை ஏமாற்றியதை சொல்லி வாழ்த்துவதா? அல்லது,
தனக்கு பதவி, சொகுசு பங்களா, சிங்கள பொலிஸ் பாதுகாப்பு, பவனி வர சொகுசு வாகனம் எனபனவற்றை கேட்டு வாங்கியதை சொல்லி வாழ்த்துவதா? அல்லது,
ஒரு துண்டு பாணுடனும் ஒரு கப் தேனீருடனும் குழந்தைகள் தமது சொந்த நிலம் கேட்டு போராடும்போது இந்திய தூதருடன் மதுக் கிண்ணம் ஏந்தி விருந்துண்ணுவதை சொல்லி வாழ்த்துவதா? அல்லது,
வாக்கு போட்ட மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும்போது பல கோடி ரூபா செலவில் கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்வதை சொல்லி வாழ்த்துவதா? அல்லது,
யுத்தம் முடிந்து ஏழு வருடமாகிவிட்டது. இன்னமும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் தனக்கு தானே “இறைபணி செம்மல்” பட்டம் கொடுத்து மகிழ்வதை சொல்லி வாழ்த்துவதா? அல்லது,
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய உதவும்படி கேட்டபோது பேப்பர் படித்துக்கொண்டு தன்னிடம் திறப்பு இல்லை என்று நக்கலாக பதில் கூறியதை சொல்லி வாழ்த்துவதா? அல்லது,
சம்பூரில் இந்திய அனல்மின் நிலைய கொடுமையில் இருந்து தம்மை காப்பாற்றும்படி மக்கள் கேட்டபோது “இந்தியா போனால் சீனா வந்துவிடும்” என்று கூறியதை சொல்லி வாழ்த்துவதா? அல்லது,
தானும் தன்னுடைய குடும்பமும் இந்தியாவில் சொகுசாக இருப்பதற்காக இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்கு துணை போவதை சொல்லி வாழ்த்துவதா?
தான் துரோகம் செய்வது பத்தாது என்று தனக்கு பின்னர் தொடர்ந்து துரோகம் செய்யவென சுமந்திரனை அறிமுகப்படுத்தியதை சொல்லி வாழ்த்துவதா?
குறிப்பு- பொதுவாக யார் இறந்தாலும் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கலாம் என இரங்குவது தமிழர் பண்பு. ஆனால் வாழும்போதே இந்த பாவி இன்னும் சாகவில்லையா என ஒருசிலரையே மக்கள் நினைப்பதுண்டு. அந்த ஒருசிலரில் ஒருவராக சம்பந்தர் அய்யா இருக்கிறார் என்பதே அவருக்கான பிறந்தநாள் வாழ்த்துப் பெருமையாகும

No comments:

Post a Comment