Saturday, February 11, 2017

•ஒருபுறம் குழந்தைகள்கூட போராடுகின்றனர் மறுபுறம் 69வது சுதந்திர தினம் கொண்டாடுகின்றனர்.

•ஒருபுறம் குழந்தைகள்கூட போராடுகின்றனர்
மறுபுறம் 69வது சுதந்திர தினம் கொண்டாடுகின்றனர்.
இதைவிட கேவலம் வேறு என்ன இருக்கு?
நாளை இலங்கையின் தலைநகர் கொழும்பில் 69வது ஆண்டு சுதந்திர விழா நடைபெற உள்ளன.
அதேவேளை இலங்கையின் இன்னொரு புறத்தில் தமது நிலத்தை வழங்க கோரி கடந்த நான்கு நாட்களாக குழந்தைகள்கூட போராடுகின்றனர்.
அப்படியென்றால் இந்த குழந்தைகள் இலங்கை மக்கள் இல்லையா? அவர்களுக்கு தமது சொந்த நிலத்தில் குடியிருக்க சுதந்திரம் இல்லையா?
சந்தோசமாக படித்துக் கொண்டும் விளையாடிக்கொண்டும் பெற்றோர் அரவணைப்பில் உறங்க வேண்டிய குழந்தைகள் இப்படி வீதியில் அமர்ந்து போராடுவது இலங்கை அரசுக்கு கேவலம் இல்லையா?
கொட்டும் பனி குளிரிலும் கும்மிருட்டிலும் இராணுவ முகாமுக்கு முன்னால் இந்த குழந்தைகள் குந்தி இருப்பது கண்டு நல்லாட்சி அரசு ஏன் இரங்கவில்லை?
ஒரு துண்டு பாணுடனும் ஒரு கப் தேனீருடனும் இவர்கள் போராடுவது ஏன் நல்லாட்சி அரசின் கண்களுக்கு தெரியவில்லை?
ஆயுதம் ஏந்தினால் பயங்கரவாதி என்பீர்கள். அமைதிவழியில் போராடும்படி ஓடிவந்து போதனை செய்வீர்கள்.
இப்போது இவர்கள் 7 வருடங்களாக நீங்கள் கூறிய அமைதி வழியில்தானே தமது நிலத்தை கேட்கிறார்கள். ஆனால் நீங்கள் அவர்களுக்கு பதில் தரவில்லையே?
குழந்தைகள் அகிம்சை வழியில் போராடுகிறீர்கள். அவர்களது கோரிக்கைக்கு பதில் அளிக்காமல் அவர்கள் முன்னால் காந்தி சிலைகளை நிறுவுகிறீர்கள். இது அந்த காந்திக்கே கேவலமாக இல்லையா?
அப்படியென்றால் என்ன அர்த்தம்? மீண்டும் அவர்களை ஆயுதம் ஏந்தச் சொல்லுகிறீர்களா? ஆயுதம் எந்தினால்தான் உங்கள் செவிட்டு காதில் உறைக்குமா?
காலனிய ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர் மட்டுமே நாட்டை சுரண்டினார்கள். ஆனால் நவகாலனியான இக் காலத்தில் இந்தியா சீனா அமெரிக்கா எல்லாம் சுரண்டுகிறது.
திருகோணமலை இந்தியாவுக்கு வித்தாச்சு. அம்பாந்தோட்டை சீனாவுக்கு வித்தாச்சு. கொழும்பு அமெரிக்காவுக்கு விற்கபடுகிறது.
இப்படியே நாட்டை எல்லாம் வித்துப்போட்டு 69வது சுதந்திரன தினம் கொண்டாடுவதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கு?
கேவலமாக இருக்கு!

No comments:

Post a Comment