Saturday, February 11, 2017

•மகளின் பிறந்தநாள் விழாவிற்கு ஜனாதிபதியை வரவழைத்தவரால் கேப்பாப்பிலவு மக்களுக்காக ஜனாபதியை சந்திக்க முடியாதா?

•மகளின் பிறந்தநாள் விழாவிற்கு ஜனாதிபதியை வரவழைத்தவரால்
கேப்பாப்பிலவு மக்களுக்காக ஜனாபதியை சந்திக்க முடியாதா?
கேப்பாப்பிலவு மக்கள் 8வது நாளாக தமது நிலத்தை தரும்படி கேட்டு போராட்டம் நடத்துகின்றனர்.
அந்த மக்களுடன் அவர்களது குழந்தைகளும் இந்த குளிரிலும் இருட்டிலும் ராணுவ முகாமின் கம்பி வேலியோரம் படுத்து உறங்கி போராடுகின்றனர்.
அவர்கள் பிரிவினை கோரவில்லை. அவர்கள் ஆயுதம் எந்திப் போராடவில்லை. அவர்களை பயங்கரவாதிகள் என்றும் அரசு இதுவரை குறிப்பிடவில்லை.
அவர்கள் தமக்கு வீடு கேட்கவில்லை. அவர்கள் தமக்கு வேலை கேட்கவில்லை. அவர்கள் கேட்பது எல்லாம் தமது நிலத்தை தம்மிடம் திருப்பி ஒப்படைக்கும்படியே.
மேலிடம் உத்தரவிட்டால் அவர்களது நிலத்தை ஒப்படைப்பதில் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று விமானப்படை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி இதற்கான உத்தரவைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தமிழ் தலைமைகள் இது குறித்து அக்கறையற்று இருக்கின்றன.
தமது மகளின் பிறந்தநாள் விழாவிற்கு ஜனாதிபதியை அழைத்து வந்த சரவணபவன் எம்.பி யும் இந்த மக்களுக்காக ஜனாதிபதியை சந்திக்க அக்கறை கொள்ளவில்லை
தனது மகளின் நாட்டிய அரங்கேற்றத்திற்கு பிரதமரை அழைத்து வந்த அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் இந்த மக்களுக்காக பிரதமரை சந்திக்க அக்கறை கொள்ளவில்லை.
தங்கள் மகளை ஒத்த வயது பிள்ளைகள் இப்படி ராணுவ முகாம் வாசலில் 8 நாட்களாக உட்கார்ந்து இருக்கிறார்களே என்று இவர்கள் கொஞ்சம்கூட இரக்கம் கொள்ளவில்லை.
என்ன கொடுமை இது?

No comments:

Post a Comment