•எப்படி இவர்களால் கொஞ்சம்கூட இரக்கமின்றி
இப்படி நடந்து கொள்ள முடிகிறது?
இப்படி நடந்து கொள்ள முடிகிறது?
கேப்பாப்பிலவு மக்கள் 9வது நாளாக போராடுகின்றனர்.
குழந்தைகள்கூட ராணுவ வேலியோரம் படுத்துறங்கி போராடுகின்றன.
ஒரு துண்டு பாணும் ஒரு கப் தேனீரும் அருந்திக்கொண்டு போராடுகின்றனர்.
பனிக் குளிரிலும் கும்மிருட்டிலும் தரையில் உர பையை விரித்து அதன்மீது குழந்தைகள் உறங்குகின்றன.
எந்த கல் நெஞ்சு படைத்தவருக்கும் இந்த குழந்தைகளின் இந்த நிலையை காணும்போது இரக்கம் வரும்.
ஆனால் சுமந்திரன் அவர்களோ கொஞ்சம்கூட இரக்கமின்றி பாரியார் சகிதம் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்கிறார்.
சம்பந்தர் அய்யாவோ சிங்கள பொலிசின் பாதுகாப்போடு காளி கோவில் கும்பாபிசேகத்தில் கலந்து கொள்கிறார்.
தமிழ் தலைவர்களான இவர்களே இரங்கவில்லை என்றால் சிங்கள தலைவர்கள் எப்படி இந்த மக்கள் மீது இரங்குவார்கள்?
நினைத்தாலே கேவலமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. சுமந்திரனும் சம்பந்தரும் உண்மையில் மனித ஜென்மங்கள் தானா?
எப்படி இவர்களால் கொஞ்சம்கூட இரக்கமின்றி இப்படி நடந்துகொள்ள முடிகிறது?
No comments:
Post a Comment