Saturday, February 11, 2017

•ஆண்டு 2025

•ஆண்டு 2025
ஆண்டுகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை
செய்தி- கேப்பாப்பிலவைச் சேர்ந்த 15 வயது மாணவி பானுப்பிரியா ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு- எதிர்கட்சி தலைவர் சுமந்திரன் அவர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் டி.பி.ஜெயராஜ் எழுதிய கதை-
"நோர்வேயில் இருக்கும் நெடியவன் எற்பாட்டில் மாணவி பானுப்பிரியா ராஜீவ் காந்தி; கொலை பாணியில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சுமந்திரன் அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்கு சாட்சியாக அவரது வீட்டில் இருந்து சுமந்திரன் படம் ஒன்றும் மிகவும் போதை தரும் ஒரு கட்டு சுருட்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நெடியவனை நாடு கடத்த வேண்டும்" என்றும் அவர் கோரியிருக்கிறார்.
சம்பந்தர் அய்யா மரணமானதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுள்ள சுமந்திரன் மீது கொலை முயற்சி என்று கூறப்படும் 300 வது கதை இது. இந்த கதைகளுக்காக இதுவரை 5000 முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்-
•பானுப்பிரியா ஒரு குழந்தைப் போராளி என்றும் அவரது போராட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் ஜ.நா செயலர் கருத்து தெரிவித்துள்ளார்.
•பானுப்பிரியாவின் ஆயுதப் போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் என்றும் அதனை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் யாழ் இந்தியதூதர் நடராஜன் தெரிவித்தார். மேலும் கேப்பாப்பிலவில் விரைவில் காந்தி சிலை நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பு- கேப்பாப்பிலவு மக்களின் நிலத்தை ஒப்படைக்க மறுப்பதால்தானே பானுப்பிரியாக்கள் உருவாகிறார்கள் என்பது குறித்து இவர்கள் யாருமே வாய் திறக்கவில்லை.

No comments:

Post a Comment