Tuesday, February 28, 2017

•இந்த கேப்பாப்பிலவு குழந்தை செய்த தவறு என்ன?

•இந்த கேப்பாப்பிலவு குழந்தை செய்த தவறு என்ன?
எமக்கு பிறந்து தவழ்ந்து விளையாட ஒரு சொந்த மண் இருந்தது.
ஆனால் இந்த குழந்தை தவழ்ந்து விளையாட சொந்த மண் இல்லையே?
எமக்கு ஊஞ்சல் கட்டி விளையாட எம் முற்றத்தில் ஒரு மரம் இருந்தது
ஆனால் இந்த குழந்தை ராணுவத்தின் வேலியோரத்தில் கட்டப்பட்ட தூளியில் அல்லவா தூங்க வேண்டியிருக்கிறது.
எமக்கு ஒரு கோயில் இருந்தது. எமக்கு ஒரு பாடசாலை இருந்தது. எமக்கு ஒரு சுடலையும் இருந்தது.
ஆனால் இன்று அதில் எல்லாம் ராணுவம் அல்லவா இருக்கிறது. இந்த குழந்தைக்கு எதுவும் இல்லையே?
இந்த குழந்தை செய்த தவறுதான் என்ன? தமிழ் இனத்தில் பிறந்ததைத் தவிர வேறு என்ன தவறு செய்துவிட்டது இந்த குழந்தை?
கண் முன்னே சொந்த மண் தெரிகிறது. ஆனால் அந்த மண் குழந்தைக்கு சொந்தமில்லை. ஏனென்றால் குழந்தை இப்போது அகதி.
சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வாழ முடியாமல் இன்னும் எத்தனை காலம் அகதியாக வாழ்வது?
எல்லா இடங்களிலும் குழந்தையை தூங்க வைக்க தாய் தலாட்டு பாடுவது வழக்கம்.
ஆனால் கேப்பாப்பிலவில் தாயை தூங்கவைக்க குழந்தைகள் பாடும் தாலாட்டு அதிசயம் நிகழும்.
ஏனெனில் அந்த குழந்தைகள் சுவாசிப்பது கேப்பாபிலவு மண்ணில் இருந்து வரும் காற்று அல்லவா.
அவர்களின் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் போராட்டத்தை சுவாசித்தது ஆகும்.
விடியல் ரொம்ப தூரம்தான். ஆனால் வெளிச்சம் இங்கு தோன்றும்.
அலைகள் எழுந்து தடுப்பினும் துணிந்து தோணி கடலைக் கிழிக்கும்.
இவர்கள் கரங்கள் எழுந்து உயரும். விடியல் நாளை சிவந்து பிறக்கும்!

No comments:

Post a Comment