Tuesday, February 28, 2017

•கேப்பாப்பிலவு மக்களுக்காக ஜே.வி.பி எம்.பி யால் குரல் கொடுக்க முடியுமென்றால் சம்பந்தர் அய்யாவால் ஏன் முடியவில்லை?

•கேப்பாப்பிலவு மக்களுக்காக ஜே.வி.பி எம்.பி யால் குரல் கொடுக்க முடியுமென்றால் சம்பந்தர் அய்யாவால் ஏன் முடியவில்லை?
தமது சொந்த நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் 27வது நாளாக போராடி வருகின்றார்கள்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக குழந்தைகள்கூட 27வது நாளாக தமது நிலத்திற்காக போராடுகிறார்கள்.
இம் மக்களின் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் சிங்கள மக்கள்கூட நேரில் வந்து தமது ஆதரவினை தெரிவிக்கின்றார்கள்.
குழந்தைகள் பங்கு பற்றிய போராட்டம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் ஆதரவினைப் பெற்ற போராட்டமாக கேப்பாப்ப்pலவு போராட்டம் இடம் பிடித்துள்ளது.
ஆனால் தமிழ் மக்களின் வாக்கு பெற்று எதிர்கட்சி தலைவர் பதவியைப் பெற்றுள்ள சம்பந்தர் அய்யா இந்த மக்களை இன்னும் சந்திக்கவும் இல்லை. அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடு:க்கவும் இல்லை.
தமிழ்தேசிய கூட்டமைப்பு போன்று ஜே.வி.பியும் இந்த நல்லாட்சி அரசு அமைய பங்களித்தவர்கள். ஆதரவளித்தவர்கள்.
ஆனால் சம்பந்தர் அய்யா போன்று நல்லிணக்கம் கெட்டுவிடும் என்று கூறி இந்த அரசை விமர்சிக்க ஜே.வி.பி தயங்கியதில்லை.
தாங்கள் உதவிய அரசு என்றாலும் இந்த அரசின் தவறுகளை பகிரங்கமாக பாராளுமன்றாத்தில் ஜே.வி.பி கண்டித்து வருகிறது.
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து சம்பந்தர் அய்யா மௌனம் சாதித்து வரும் வேளையில் ஜே.வி.பி எம்.பி பிமல் ரத்தனநாயக்க இம் மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.
கேப்பாப்பிலவு மக்களின் நிலம் உடனடியாக அம் மக்களிடம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் அதற்கான காரணத்தை உடன் தெரியப்படுத்த வேண்டும் என்று பிமல் எம்.பி அரசிடம் கேட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி நாடுமுழுவதும் புத்தர் சிலைகளை சேதப்டுத்துவோர் பௌத்த சிங்களவரேயன்றி தமிழரோ முஸ்லிம்களோ அல்ல என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசியகூட்டமைப்பால் இனவாதக்கட்சி என்று கூறப்டும் ஜே.வி.பி தமிழ் மக்களுக்காக இவ்வாறு குரல் கொடுக்கிறது.
ஆனால் தமிழர்களின் தலைமை என்று கூறப்படும் சம்பந்தர் அய்யா நல்லிணக்கம் கெட்டுப்போய்விடும் என்று சொல்லி மௌனம் காக்கிறார்.
இது எல்லாம் தமிழ் மக்களின் தலைவிதி?

No comments:

Post a Comment