Saturday, February 11, 2017

•தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களை தலைகுனிய வைக்கின்றனர்!

•தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களை
தலைகுனிய வைக்கின்றனர்!
வோட்டு போட்ட மக்கள் ஒழுகும் ஓலைக் குடிசை வீடுகளில் வாழ்கின்றனர். ஆனால் பதவி பெற்ற தலைவர்களோ மாட மாளிகைகளில் சொகுசாக வாழ்கின்றனர்.
தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா வுக்கு இந்தியாவில் வீடு உண்டு. இந்நிலையில் தற்போது மாவிட்டபுரத்தில் நான்கு கோடி ரூபா பெறுமதியான பங்களாவை கட்டி வருகிறார்.
கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நல்லூர் செட்டித் தெருவில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வீடு ஒன்றை வாங்கியிருந்தார்.
தற்போது அதே நல்லுர் ஆலைய சூழலில் சிறீதரன் எம்.பி இன்னொரு வீட்டை அண்மையில் வாங்கியுள்ளார்.
யுத்தகாலத்தில் யாழ் நகரில் பல வீடுகளை பிடித்து வைத்திருந்த சரவணபவன் எம்.பி தற்போது அவற்றை தமது சொத்துகளாக மாற்றி வருகிறார்.
இதே சரவணபவன் எம்.பி கடந்த வருடம் எட்டு கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்திருந்தார்.
தம்மை எளியவர்களாகவும் ஏழ்மை மிக்கவர்களாகவும் காட்டிக் கொள்ளும் இந்த தலைவர்கள் திடீரென்று கோடிக் கணக்கான ரூபா பெறுமதிகளில் வீடுகளையும் சொத்துகளையும் வாங்குவது எப்படி என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட தலைவர்களோ அல்லது அவர்களது தமிழரசுக்கட்சியோ இது குறித்து எந்த பதிலும் அளிக்காமல் உள்ளனர்.
இதேபோல் ஜே.வி.பி தலைவர் அனுராகுமார திசநாயக்கா மீதும் அயர்லாந்தில் வீடு ஒன்றை வாங்கியிருப்பதாக விமல்வீரவம்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
உடனே ஜே.வி.பி கட்சி தம் தலைவர் மீதான குற்றச்சாட்டை மறுத்ததுடன் தமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அயர்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்தது.
குறித்த முகவரியில் உள்ள வீடு ஆங்கிலேயர் ஒருவருக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை பெற்று வந்து ஊடகங்களுக்கு அது கொடுத்துள்ளது.
உண்மையில் ஜே.வி. பி கட்சியின் இந்த செயற்பாடானது மற்ற கட்சிகளுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக உள்ளது.
ஜே.வி.பி யின் இந்த செயற்பாடு அக் கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் பெருமை கொள்ள வைக்கிறது.
ஆனால் எமது தமிழ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை அந்த தலைவர்களோ அல்லது தமிழரசுக்கட்சியோ எந்த பதிலும் அளிக்காமல் இருப்பது தமிழ் மக்களை தலை குனிய வைக்கிறது.
தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்று தராவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் நேர்மையானவர்களாக இவர்கள் இருந்திருக்கலாம்.
இவர்கள் மோசடியான வழிகளில் பெறும் பணத்தில் கோடிக் கணக்கான ரூபா பெறுமதியில் வீடுகளை வாங்குவது தமிழ் மக்களை தலைகுனிய வைக்கிறது.

No comments:

Post a Comment