Saturday, February 11, 2017

•சொந்த நிலத்தை கேட்டு கேட்டு களைத்த குழந்தை உறங்குகிறது கேப்பிலாபுலவு ராணுவ வேலியோரத்தில்!

•சொந்த நிலத்தை கேட்டு கேட்டு களைத்த குழந்தை
உறங்குகிறது கேப்பிலாபுலவு ராணுவ வேலியோரத்தில்!
மற்ற குழந்தைகள் போல் இந்த குழந்தையால் ஓடி விளையாட முடியவில்லை. ஏனெனில் தன் நிலத்திற்குகாக இந்த குழந்தை போராட வேண்டியிருக்கிறது.
மற்ற குழந்தைகள் போல் இந்த குழந்தையும் தம் பெற்றார் அரவணைப்பில் உறங்க முடியவில்லை. ஏனெனில் இந்த குழந்தை ராணுவ வேலியோரத்தில் உறங்க வேண்டியுள்ளது.
தன் நிலத்தை கேட்டு கேட்டு இந்த குழந்தை களைத்துவிட்டது. ஏனெனில் இந்த குழந்தைக்கு கடந்த 6 நாட்களாக ஒரு துண்டு பாணும் ஒரு கப் தேனீருமே உணவு கிடைக்கிறது.
இரக்கமற்ற ராணுவம் இரவில் மின்சாரத்தை நிறுத்துகிறது. குடிதண்ணீரையும்கூட வழங்க மறுக்கிறது.
அமைதியாக அகிழ்சை வழியில் போராடினால் தீர்வு கிடைக்கும் என்று போதித்தவர்கள் இந்த குழந்தைக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?
இந்த குழந்தை பிரிவினை கோரவில்லை. இந்த குழந்தை ஆயுதம் ஏந்தவில்லை. இந்த குழந்தை கேட்பது எல்லாம் தனது சொந்த நிலத்தை திருப்பி தரும்படிதானே,
இந்த குழந்தையின் நியாயமான கோரிக்கையை ஏன் நல்லாட்சி அரசால் இன்னும் நிறைவேற்ற முடியவில்லை?
இந்த குழந்தைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது உலகில் வாழும் தமிழர்கள் அனைவரினதும் கடமையாகும்.
இந்த குழந்தையின் போராட்டம் வெற்றி பெறவேண்டும். இந்த குழந்தைக்கு அதன் சொந்த நிலம் திருப்பி கிடைக்க வேண்டும்.
இந்த குழந்தைக்கு ஒரு சந்தோசமான வாழ்வு கிடைக்க உதவ வேண்டியது மனிதாபிமானம் உள்ள அனைவரின் கடமையாகும்.
ஜல்லிக்ட்டுக்காக ஒன்று திரண்ட எங்களால் எம் குழந்தைக்காக ஒன்று திரள முடியாதா?
முடியும் என்று காட்டுவோம்!

No comments:

Post a Comment