•சம்பந்தரையும் சுமந்திரனையும் விலைக்கு வாங்கலாம்.
ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது!
ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது!
ஒரு மனிதனை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்கமுடியாது என்று பிடல் காஸ்ரோ கூறினார்.
அது உண்மைதான் என்பதை ஈழத்தில் கேப்பாப்பிலவு மக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
சம்பந்தருக்கு பதவியையும் சுமந்திரனுக்கு பணத்தையும் கொடுத்து அவர்களை வாங்கிவிட்டால் தமிழ் மக்களையும் வாங்கிவிடலாம் என நல்லாட்சி அரசு நினைத்தது.
ஆனால் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் மக்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது.
10வது நாளாக கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது. அவர்களுக்கு ஆதரவாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
போராட்டம் பரவுகிறது. 85 தமிழ் குடும்பங்களுடன் ஆரம்பித்த போராட்டம் இன்று தமிழ் மக்கள் மத்தியில் வேகமாக பரவுகிறது.
40 ஆயிரம் மக்களை கொன்று குவித்தால் மக்கள் அச்சத்தில் போராட முன்வரமாட்டார்கள் என்று இலங்கை அரசு நினைத்தது.
ஆனால் 7 வருடத்தில் மீண்டும் மக்கள் எழுந்து நின்று போராடுகின்றனர். அவர்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல உலகத்திற்கும் ஒரு சேதி சொல்லுகின்றனர்.
எத்தனை அடக்குமுறையை மேற்கொண்டாலும் அத்தனை அடக்குமுறைக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழுவர் என்பதே அந்த சேதி
No comments:
Post a Comment