Sunday, June 18, 2017

•8ம் திகதி ஜெரமிக் கோர்பின் வெல்லலாம்

•8ம் திகதி ஜெரமிக் கோர்பின் வெல்லலாம்
அல்லது திரேசா மே அம்மையார் வெல்லலாம்
ஆனால் இப்போதே வென்றவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமே!;.
இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக லேபர் கட்சியின் தலைவரும் அடுத்த பிரித்தானிய பிரதமராக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் ஜெரமிக் கோர்பன் அறிவித்துள்ளார்.
இந்தியாகூட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இதுவரை அங்கீகரிக்கவில்லை. ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் அங்கீகரித்தள்ளார்.
ஜெரமிக் கேர்பன் வெல்வாரா? வென்றாலும் எந்தளவு தூரத்திற்கு தமிழ் மக்களுக்கு அவரால் உதவ முடியும்? என்பன குறித்து சந்தேகம் இருந்தாலும்கூட அவர் தனது லேபர் கட்சியின் சார்பில் தமிழ் மக்களின் சுயநிர்ண உரிமையை அங்கீகரித்திருப்பது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.
பிரித்தானியாவில் இருக்கும் இரண்டு லட்சம் தமிழ் மக்களின் வாக்குகளுக்காகவே அவர் இதைக் கூறியிருந்தாலும்கூட இது இந்த தமிழ் மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.
முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின்னர் புலம் பெயர்ந்த தமிழர்கள் துவண்டுவிடவில்லை. அவர்கள் மழையிலும் பனிக் குளிரிலும் சயிக்கிளிலும் வாகனங்களிலும் திரிந்து திரிந்து பிரச்சாரம் செய்ததின் விளைவே இந்த வெற்றி.
பிரித்தானியாவைத் தொடர்ந்து இனி கனடா, நோர்வே சுவிஸ் பிரான்ஸ் என பல நாடுகளும் இவ்வாறு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் நிலை தோன்றியுள்ளது.
எனவே இந்த தேர்தல் இப்போதே தமிழ் மக்களுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இனிவரும் காலம் தமிழ் மக்கள் மீண்டும் எழுந்து நிற்கும் காலம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment