Sunday, June 18, 2017

•அமைச்சர்கள் ஜங்கரநேசன் மற்றும் குருகுலராசா பதவி விலக வேண்டும் இல்லையேல் விலக்கப்பட வேண்டும்.

•அமைச்சர்கள் ஜங்கரநேசன் மற்றும் குருகுலராசா
பதவி விலக வேண்டும் இல்லையேல் விலக்கப்பட வேண்டும்.
வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராசா ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளமையினால், அவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு எதிராக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்,
•நோர்தன் பவர் மின் உற்பத்தி நிலையம் சுன்னாகத்தில் தொழிற்பட்ட போது அதனது கழிவு எண்ணெய் குடிநீரில் கலந்த விடயத்திற்கு ஆய்வுக்குழு ஒன்றை நியமித்து அக்குழுவின் அறிக்கை மூலம் நிறுவனத்திற்கு சாதகமாக அறிக்கையை வெளிப்படுத்தி, உண்மையை அமைச்சர் ஐங்கரநேசன் மறைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
•பாத்தீனியம் ஒழிப்பு என்ற பெயரில் மாகாண சபையின் நிதியை அமைச்சர் மோசடி செய்துள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
•தனியார் நிறுவனம் ஒன்றிடம் 2015 ஆம் ஆண்டு முதல் வருடம் ஒன்றுக்கு 20 மில்லியன் ரூபா வீதம் 2016 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட 40 மில்லியன் ரூபாவை அமைச்சர் ஐங்கரநேசன் மோசடி செய்துள்ளதாகவும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் த. குருகுலராசாவிற்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்
•வட மாகாண கல்வி அமைச்சர் தன்னுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்தி தவறான இடமாற்றங்களை வழங்கியுள்ளதாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
•கிளிநொச்சி – பாரதிபுரத்தில் மாணவி ஒருவர் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட செயற்பாட்டிற்கு எதிராக குரல் எழுப்பிய ஆசிரியரைப் பழிவாங்கி அவருக்கு இடமாற்றம் வழங்கியதாகவும் கல்வி அமைச்சருக்கு எதிராக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
•வட மாகாணத்தில் உள்ள கல்வி வலயத்தில் ஆசிரியர் மாநாடு என்ற பெயரில் நிதி செலவழித்து கல்வி அமைச்சர் வீண் விரயம் செய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்து.
•மாகாண பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை முன்னாள் ஜனாதிபதியின் வருகைக்காக 6 தேசிய பாடசாலைகளை அலங்கரிக்க அவர் செலவளித்ததாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரு அமைச்சர்களை மட்டுமன்றி அவர்களின் சட்டப்பூர்வமற்ற செயற்பாடுகளுக்கு பக்கபலமாகக் கடமையாற்றிய அமைச்சின் செயலாளர்களையும் அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இப்போது மக்கள் மனதில் தோன்றியுள்ள கேள்வி என்னவெனில் இவர்களை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதவி நீக்கப் போகிறாரா அல்லது காப்பாற்றப் போகிறாரா என்பதே.

No comments:

Post a Comment