Sunday, June 18, 2017

கலைஞர் வயது 94!

கலைஞர் வயது 94!
மறக்கவும் முடியவில்லை.
மன்னிக்கவும் முடியவில்லை.
அதனால், வாழ்த்தவும் முடியவில்லை.
எதிரியாக இருந்தாலும் மரணப் படுக்கையில் இருப்பவர்களை அவமதிக்கக்கூடாது என்பது தமிழன் மரபு.
ஆனால் எத்தனை கொடுமைக்காரனாக இருந்தாலும் தனது இறுதி நேரங்களில் தன் தவறுகளை நினைத்து வருந்துவதுண்டு.
அப்படி ஒரு வருத்தம் கலைஞருக்கு வருமேயாயின் அவர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு துணை போனதை நினைக்க வேண்டாம்.
சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் வயதான தாயாரை திருப்பி அனுப்பியதை நினைத்து அவர் வருந்த வேண்டாம்.
தனது பதவிக்காக வேலுர் கோட்டையில் சிறப்புமுகாம் ஆரம்பித்து அதில் அடைக்கப்பட்ட அகதிகளை நினைத்து வருந்த வேண்டாம்.
அடைக்கப்பட்ட அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரியபோது கமிஷனர் தேவாரத்தை அனுப்பி இரு அகதி இளைஞர்களை சுட்டுக் கொன்றதைக்கூட நினைக்க வேண்டாம்.
“நான் சிறப்புமுகாமை விரைவில் மூட இருந்தேன். ஆனால் அதற்குள் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது” என்று எதிர்க்கட்சியில் இருக்கும்போது சொல்லிவிட்டு அதன்பின் இரண்டு தடவை பதவிக்கு வந்தபோதும் சிறப்புமுகாமை மூடாமல் இருந்ததை நினைக்க வேண்டாம்.
ஆனால், எம்.ஜிஆரை விட உங்களுக்கு தமிழ இன உணர்வு அதிகம் என்பதைக் காட்டுவதற்காக ஒரு அகதி சிறுவனை 1983ல் தத்து எடுத்து வளர்த்தீர்களே. அந்த அகதிசிறுவனுக்கு மணி என்றும் பெயர் வைத்தீர்களே. இப்போது அந்த அகதி சிறுவன் எங்கே எனபதையாவது நினைத்து வருந்துங்கள்.
மகன் என்று தத்து எடுத்திருப்பதால் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வருமே என்று ஸ்டாலினால் அந்த சிறுவன் கொல்லப்பட்டு விட்டான் என்று உங்களுடன் கூட இருந்த பரிதிஇளம் வருதி கூறுகின்றாரே. அது உண்மையா?
உங்களுடைய பெரிய குடும்ப படத்தில் தேடுகின்றோம். அந்த அப்பாவி அகதி சிறுவனைக் காணவில்லையே.
மரணத்தின் விழிம்பில் இருக்கும் நீங்கள் எதற்காக வருந்தாவிட்டாலும் இந்த சிறுவனுக்காக வருந்துங்கள்.
உங்களுக்கு பேச்சு வரவில்லை என்கிறார்கள். பேச்சு வந்தால் அந்த சிறுவன் எங்கே என்பதையாவது கூறிவிடுங்கள் கலைஞரே!

No comments:

Post a Comment