Sunday, June 18, 2017

அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக

•அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக
இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட
ஈழத்து இளம் தமிழ் எழுத்தாளர் எஸ்.போஸ்
பத்து வருடங்களுக்கு முன்னர் 16.04.2007 யன்று இரவு நேரத்தில் வவுனியா ராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்து வந்த எஸ்.போஸ் என்று அழைக்கப்படும் சந்திரபோஸ் சுதாகர் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக இந்த இளம் எழுத்தாளர் அவரது 7வயது மகன் முன்னிலையில் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஈழநாதம், ஈழநாடு, வெளிச்சம், நிலம், வீரகேசரி, சரிநிகர், மூன்றாவது மனிதன், தமிழ் உலகம், காலச்சுவடு, இன்னொரு காலடி, தடம் ஆகிய இதழ்களில் இவரது எழுத்துக்கள் வெளிவந்துள்ளன.
இலங்கை அரசின் அடக்குமுறையின் முன் சாதாரண மனிதரின் குரலாக ஒலித்த எஸ்.போஸ் அவர்களின் படைப்புகள் வடலி பதிப்பகத்தால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.போஸ் நினைத்திருந்தால் வெளிநாட்டிற்கு தப்பி சென்று வாழ்ந்திருக்க முடியும். அல்லது கொஞ்சம் விட்டுக்கொடுத்து வாழ்திருந்தால் இன்றும் உயிருடன் இருந்திருக்க முடியும்.
ஆனால் எஸ்.போஸ் தான் கொல்லப்படுவேன் என தெரிந்திருந்தும் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடங்கொடாமல் இறுதிவரை உறுதியுடன் வாழ்ந்தார்.
தனது எழுத்துக்கள் எதிர்காலத்தில் வடலி பதிப்பகத்தால் தொகுத்து வெளியிடப்படும் என்றோ அல்லது அது லண்டனில் வெளியிடப்பட்டு பேசப்படும் என்றோ எஸ்.போஸ் ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.
ஆனால் அடக்குமுறைக்கு எதிராகவும் , அதிகாரத்திற்கு எதிராகவும் எழுதப்படும் எழுத்துகள் யாவும் உலகில் எப்படி தொடர்ந்து நினைவு கூரப்படுகிறதோ அதேபோன்று எஸ்போஸ் எழுத்துக்களும் தமிழ் மக்களால் என்றும் நினைவு கூரப்படும்.
கடந்த 03.06.17 யன்று லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் எஸ்.போஸ் எழுத்துக்கள் நினைவு கூரப்பட்டன.
வாசன் அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் எஸ.;போஸ் குறித்தும் அவரது எழுத்துக்கள் குறித்தும் கஜன் கம்ளர், கௌரிபரா, ஜெகன் தவராசா, சிவகுமார், அகிலன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இரண்டாவ அமர்வாக “கனடா- நவீன நாடக சூழல்” குறித்து கனடாவில் இருந்து வந்திருந்த பா.அ.ஜெயகரன் உரையாற்றினார். இந் நிகழ்விற்கு கே.கிருஸ்ணராசா தலைமை தாங்கினார்.
இறுதியாக வந்திருந்தவர்களின் கருத்து பரிமாற்றங்களுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment