Sunday, June 18, 2017

ஓ! அப்துல் ரவூப், எங்களை மன்னித்து விடு!

ஓ! அப்துல் ரவூப், எங்களை மன்னித்து விடு!
1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. ஈழத் தமிழர்களுக்காக அப்துல் ரவூப் தன்னையே எரித்துக்கொண்ட நாள்.
சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்த துயரச் செய்தியைக் கேட்டு அப்துல் ரவூப் துடித்த நாள் அது.
அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது.
அப்துல் ரவூப் மரணம்,
• ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது
• தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது.
• ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது.
• எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது.
• தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது.
இத்தனை பயன் உள்ள செய்திகளையும் அப்துல் ரவூப் தன் மரணம் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறினான்.
அப்துல் ரவூப் இறந்தபின்பு ஜெயா அம்மையாரின் பொலிஸ் அவரது தாய் தந்தையரை மிரட்டியது. காதல் தோல்வியில் அப்துல் ரவூப் தற்கொலை செய்தான் என்று கூறும்படி வற்புறுத்தியது. அவ்வாறு கூறினால் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியது.
ஆனால் அந்த ஏழைப் பெற்றோர் எதற்கும் அஞ்சவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை. ஈழத் தமிழர்களுக்காக தம் மகன் உயிர் விட்டதை எண்ணிப் பெருமைப்படுவதாகவே கூறினார்கள்.
இன்றும்கூட அவர்கள் அந்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நம்மவர்கள் அப்துல் ரவூப்பை மறந்துவிட்டார்கள். அவரின் தியாகத்தையும்கூட நினைவு கூர தவறி விட்டார்கள்.
அப்துல் ரவூப் மட்டுமல்ல. இதோ இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து உயிர் விட்ட முஸ்லிம்கள் சிலரின் விபரம்,
1
வீரவேங்கை சாபீர்
சரிபுதீன் முகமட் சாபீர்
தியாவெட்டுவான், மட்டக்களப்பு.
நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சாபீர் இயற்பெயர்:சரிபுதீன் முகமட் சாபீர் பால்:ஆண்
ஊர்:தியாவெட்டுவான், மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரச்சாவு:13.05.1988
நிகழ்வு: நாசிவன்தீவில் ரெலோ கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு
2
வீரவேங்கை ரகீம் நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்: ரகீம் வீரச்சாவு:08.05.1986
3
வீரவேங்கை உஸ்மான் கிழங்கு
அப்துல்காதர் சாதிக் யாழ்ப்பாணம். நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்: உஸ்மான்கிழங்கு
இயற்பெயர்: அப்துல்காதர் சாதிக் பால்: ஆண் ஊர்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:10.05.1966 வீரச்சாவு:25.08.1986
நிகழ்வு: யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடன் சமரில் வீரச்சாவு
4
வீரவேங்கை லத்தீப்
முகமது அலியார் முகமது லத்தீப்
ஒல்லிக்குளம், காத்தான்குடி, மட்டக்களப்பு.
நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: லத்தீப்
இயற்பெயர்:முகமது அலியார் முகமது லத்தீப் பால்:ஆண்
ஊர்: ஒல்லிக்குளம், காத்தான்குடி, மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரப்பிறப்பு: 16.11.1962 வீரச்சாவு: 24.12.1986 நிகழ்வு:மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ பி ஆர்எல் எப் கும்பல் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
5
கப்டன்
பாறூக்
அகமதுலெப்பை முகமது கனீபா
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 07.01.1987
6
கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன்
பேராறு, கந்தளாய், திருகோணமலை.
நிலை:கப்டன் இயக்கப் பெயர்:குட்டி (தினேஸ்) இயற்பெயர்:முகமது அலிபா முகமது ஹசன்
பால்:ஆண் ஊர்:பேராறு, கந்தளாய், திருகோணமலை. மாவட்டம்:திருகோணமலை
வீரச்சாவு:28.04.1987 நிகழ்வு:திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு
7
வீரவேங்கை ரகுமான் நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:ரகுமான் வீரச்சாவு:08.05.1986
8
கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன் பேராறு, கந்தளாய், திருகோணமலை.
நிலை:கப்டன் இயக்கப் பெயர்:குட்டி (தினேஸ்) இயற்பெயர்:முகமது அலிபா முகமது ஹசன்
பால்:ஆண் ஊர்: பேராறு, கந்தளாய், திருகோணமலை. வீரச்சாவு: 28.04.1987
நிகழ்வு: திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு
9
வீரவேங்கை சலீம் வீரச்சாவு:03.07.1987
நிகழ்வு: அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
10
வீரவேங்கை நசீர்
இயக்கப் பெயர்: நசீர் இயற்பெயர்: முகமட் நசீர்
பால்:ஆண் ஊர்:காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:15.03.1963 வீரச்சாவு:30.12.1987 நிகழ்வு:மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு
11
வீரவேங்கை நகுலன்
இயக்கப் பெயர்: நகுலன் இயற்பெயர்:யுனைதீன் பால்:ஆண் ஊர்:அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு:26.06.1988 நிகழ்வு:அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு
12
வீரவேங்கை நசீர் இயக்கப் பெயர்:நசீர் இயற்பெயர்:சம்சுதீன் நசீர் ஊர்:ஒலுவில், அம்பாறை.
வீரப்பிறப்பு 19.02.1960 வீரச்சாவு:17.02.1989 நிகழ்வு: மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு
13
வீரவேங்கை ஜெமில் ஜெயாத் முகமது உசைதீன்
இயற்பெயர்:ஜெயாத் முகமது உசைதீன்
ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:28.03.1968 வீரச்சாவு:05.08.1989
நிகழ்வு: மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியில் இந்தியப்படையினருடனான சமரில் வீரச்சாவு
14
வீரவேங்கை சியாத்
நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சியாத் இயற்பெயர்:மீராசாகிபு காலிதீன்
ஊர்:சாய்ந்தமருது, அம்பாறை. வீரப்பிறப்பு:18.08.1972 வீரச்சாவு:06.12.1989
நிகழ்வு: பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் பதுங்கியிருந்து தாக்கியதில் வீரச்சாவு
15
2ம் லெப்டினன்ட் சாந்தன் நைனா முகைதீன் நியாஸ்
இயக்கப் பெயர்: சாந்தன் இயற்பெயர்:நைனா முகைதீன் நியாஸ் ஊர்: நிலாவெளி, திருகோணமலை.
வீரப்பிறப்பு:17.05.1972 வீரச்சாவு:06.02.1990
நிகழ்வு: திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ என் டி எல் எவ் கும்பலின் முகாமைத் தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவு
16
வீரவேங்கை அலெக்ஸ்
இயக்கப் பெயர்: அலெக்ஸ் இயற்பெயர்:அகமட் றியாஸ்
ஊர்:மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:23.01.1970 வீரச்சாவு:04.05.1990
17
வீரவேங்கை சுந்தர் (சந்தர்)
அகமட் லெப்பை செப்லாதீன்
இயக்கப் பெயர்: சுந்தர் (சந்தர்) இயற்பெயர்:அகமட் லெப்பை செப்லாதீன்
ஊர்:வேப்பானைச்சேனை, அம்பாறை வீரப்பிறப்பு: 25.02.1973 வீரச்சாவு:25.05.1990
18
வீரவேங்கை கமால் மட்டக்களப்பு வீரச்சாவு:07.06.1990
19
வீரவேங்கை தாகீர்
இயக்கப் பெயர்: தாகீர் இயற்பெயர்:முகைதீன்பாவா அன்சார்
ஊர்: திருகோணமடு, பொலனறுவை, சிறிலங்கா வீரப்பிறப்பு:29.04.1972 வீரச்சாவு:11.06.1990
நிகழ்வு: மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
20
வீரவேங்கை கபூர்
இயற்பெயர்:முகமதுஅலியார் முகமதுசலீம் ஊர்:காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு. வீரச்சாவு:11.06.1990
நிகழ்வு: மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு
21
லெப்டினன்ட் ஜெமில் இயற்பெயர்:கரீம் முஸ்தபா
ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு:12.06.1990 நிகழ்வு:திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
22
வீரவேங்கை தௌபீக்
இயற்பெயர்:இஸ்மாயில் ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு:12.06.1990
நிகழ்வு: திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
23
வீரவேங்கை ஜிவ்றி
இயற்பெயர்:முகம்மது இலியாஸ் ஊர்:4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:05.03.1974 வீரச்சாவு:13.06.1990
நிகழ்வு: திருகோணமலை கும்புறுமூலையில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
24
வீரவேங்கை தர்சன் இயற்பெயர்:அப்துல்காதர் சம்சி வீரச்சாவு:13.06.1990
25
வீரவேங்கை கலையன்
இயக்கப் பெயர்: கலையன் இயற்பெயர்:கச்சுமுகமது அபுல்கசன்
ஊர்:1ம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. வீரச்சாவு:14.06.1990
நிகழ்வு: சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
26
வீரவேங்கை அன்வர் வீரச்சாவு:15.06.1990
நிகழ்வு: பாணமையில் சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் முகாமை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
27
வீரவேங்கை ஜெகன் இயற்பெயர்:ஆப்தீன் முகமட் யூசுப்
ஊர்:குச்சவெளி, திருகோணமலை. வீரப்பிறப்பு:08.04.1972 வீரச்சாவு:15.06.1990
நிகழ்வு: திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
28
வீரவேங்கை குபீர் ஊர்:அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு:15.06.1990
நிகழ்வு: பாணமையில் சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் முகாமை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
29
வீரவேங்கை ராவ்
இயக்கப் பெயர்: ராவ் இயற்பெயர்:முகமது ரபீக் ஊர்:பொத்துவில், அம்பாறை.
வீரச்சாவு:15.06.1990
நிகழ்வு: லகுகலவில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
30
வீரவேங்கை நியாஸ் ஊர்:மூதூர், திருகோணமலை வீரச்சாவு:17.06.1990
நிகழ்வு: மட்டக்களப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
31
வீரவேங்கை மஜீத் இயற்பெயர்:முகமது இஸ்காக் கூப்சேக்அலி ஊர்:மீராவோடை, மட்டக்களப்பு.
வீரச்சாவு:18.06.1990
நிகழ்வு: வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
32
வீரவேங்கை ஜின்னா
இயற்பெயர்:லெப்பைதம்பி செய்னூர் ஊர்:ஓட்டமாவடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:20.10.1970 வீரச்சாவு:19.06.1990
நிகழ்வு: அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கித் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
33
வீரவேங்கை டானியல்
இயற்பெயர்:கனீபா முகமதுராசீக் ஊர்:திருகோணமலை.
வீரப்பிறப்பு:23.06.1970 வீரச்சாவு:22.06.1990
நிகழ்வு: திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
34
வீரவேங்கை ஹனியா
இயற்பெயர்:அபுசாலி புகாரி ஊர்:அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு:15.07.1990
35
வீரவேங்கை நிர்மல்
இயற்பெயர்:அப்துல நசார் ஊர்:புடவைக்கட்டு, திருகோணமலை.
வீரப்பிறப்பு:19.01.1972 வீரச்சாவு:27.07.1990
நிகழ்வு: திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு
தயவு செய்து இனியாவது ஒரு சிலரின் தவறுகளுக்காக முழு இனத்தையும் குற்றம் சுமத்தாதீர்கள். தமிழ் முஸ்லிம் மக்களின் ஜக்கியத்தை குழப்பும் வேலையை செய்யாதீர்கள்.

No comments:

Post a Comment