Thursday, June 29, 2017

•அறிவியலை பின்னோக்கி இழுக்கும் முட்டாள் மதவாதிகள்!

•அறிவியலை பின்னோக்கி இழுக்கும் முட்டாள் மதவாதிகள்!
அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அறிவியலின் மிகப் பெரிய கணடுபி;டிப்புகளில் ஒன்றாக டார்வின் அவர்களின் கூர்ப்பு விதி உள்ளது.
அதாவது உயிhகளின் பரிணாம வளர்ச்சி பற்றியும் மனிதனின் தோற்றம் பற்றியும் விஞ்ஞான பூர்வமாக டார்வின் விதி கூறுகிறது.
உலகம் பூராவும் இவ் டார்வின் கோட்பாடு ஏற்கப்பட்டு பாடசாலைகளில் கல்வி; திட்டத்தில் போதிக்கப்படுகிது.
ஆனால் சவூதி அரோபியாவில் இக் கோட்பாடு பாடசாலைகளில் போதிக்கப்படுவதில்லை. தற்போது இரண்டாவது நாடாக துருக்கியிலும் இக் கோட்பாடு பாடசாலை கல்வியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இனி இந்நாடுகளில் முஸ்லிம் மத கோட்பாட்டின் படி முதல் மனிதன் ஆதாம் மண்ணில் இருந்தும் இரண்டாவது மனிதன் ஏவாள் அவனது எலும்பு மச்சையில் இருந்தும் தோன்றியதாகவே சொல்லிக் கொடுக்கப்படவுள்ளது.
இந்தியாவில் பசுவே அனைவருக்கும் தாய் என்றும் பசுவைக் கொல்வதை தடை செய்தும் உள்ளனர்.
பசுமாடு தாய் என்றால் காளை மாடா அனைவருக்கும் தந்தை ? என்று பகுத்தறிவுவாதிகள் கேள்வி கேட்டும்கூட மதவெறியர்கள திருந்தவில்லை.
இந்த இந்துமத வெறியர்கள் மாட்டிறைச்சி உண்டதாக சொல்லி அப்பாவி முஸ்லிம்களை அடித்துக் கொல்கிறார்கள்.
முஸ்லிம்கள் மதவெறியர்கள் என்றும் இவர்களே உலகம் முழுவதும் பயங்கரவாதிகளாக இருப்பதாக அமெரிக்கா பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகள் பிரச்சாரம் செய்கின்றன.
ஆனால் இதே அமெரிக்காதான் ISIS என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி அதற்கு ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஆயுதங்களையும் வழங்கியதாக சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.
முதலாளித்துவ நெருக்கடியினால் மக்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சி செய்துவிடக்கூடாது என்பதற்காக ஏகாதிபத்தியங்கள் நன்கு திட்டமிட்டு மதவாத பயங்கரவாதத்தை தோற்றுவிக்கின்றன.
இதற்கு பலியாகும் மக்கள் அறியாமையினால் தமக்குள் சண்டையிட்டு சாகின்றனர். ஒருவரை ஒருவர் கொல்கின்றனர்.
குரங்கில் இருந்து மனிதன் தோன்றியதாக டார்வின் தனது உயிரின் பரிணாமக் கோட்பாட்டில் கூறுகிறார்.
ஆனால் குரங்குகள் தமக்குள் மதரீதியாக பிரிந்து ஒரவரை ஒருவர் அடித்துக் கொல்வதில்லை.. குண்டு வைத்தக் கொல்வதில்லை.
எனவே டார்வின் விதி சரிதானா என்று மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் தோன்றியுள்ளது!

No comments:

Post a Comment