Thursday, June 29, 2017

•மகனை இழந்து தவிக்கும் இந்த தந்தைக்கு நியாயம் கிடைக்க ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உதவுவாரா?

•மகனை இழந்து தவிக்கும் இந்த தந்தைக்கு நியாயம் கிடைக்க
ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உதவுவாரா?
இதோ திருகோணமலையைச் சேர்ந்த ஒரு ஏழை தமிழ் தந்தையின் வேண்டுகோள்,
“எனது மகன் தேவராஜசர்மா. கடந்த 1990ம் ஆண்டு ஆனி மாதம் 23ம் திகதி திருகோணமலை அன்புவழிபுரத்தில் நடைபெற்ற இரானுவ சுற்றிவளைப்பு தேடுதலின்போது இரானுவத்தை சேர்ந்த முதியன் சலாகே சரத்ஜயசிங்க பெரேரா என்ற பெயருடைய கோபரல் பிடித்து சென்றார்
இதனை குற்றப்புலனாய்வு பொலிஸ்க்கு அறிவித்த போது அவர்களால் வழக்கு தொடரப்பட்டபோது நீதிமன்றத்தில் அவர் பிடித்து சென்றதை ஏற்றுக்கொண்டார் .
அதனால் அவருக்கு உயர்நீதிமன்றத்தினால் 7 வருட சிறைதண்டணைவிதிக்கப்பட்டு தற்போது 7வருடம் முடிவடைந்து வெளியில் வந்திருப்பார்
உயர்நீதிமன்ற தீர்ப்பில் எனது மகன் தேவராஜசர்மா உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதற்குரிய பதிலை அவரை பிடித்து சென்ற முதியன் சலாகே சரத்ஜயசிங்க பெரேரா கூறவேண்டும் என தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது.
இதனை நான் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்குஅறிவித்து எனது மகனை அவரிடமிருந்து மீட்டுத்தாருங்கள் என எழுதி கேட்டபோது எதிரிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவரிடம் ஒன்றும் கேட்க முடியாது என்றும் நீங்கள் அரசிடம் நட்டஈட்டை கேட்கும்படி பதில் எழுதியிருந்தனர்
இலங்கை மனித உரிமைக் குழுவினால் நட்டஈடு கொடுக்கும்படி அரசுக்கு சிபார்சு செய்தும் நட்ட ஈட்டை அரசு வழங்காததால் அரசுமீது வழக்கு தொடரப்பட்டபோது உயர்நீதிமன்றமும் நட்டஈடு வழங்கமுடியாது என தள்ளுபடிசெய்யப்பட்டதால் தற்போது மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது
இன்றுடன் மகனை பிடித்துச் சென்று 27 வருடங்கள் முடிவடைகின்றது நீதியில்லை....”
பாராளுமன்ற உறுப்பினர், தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி என பல பதவிகளை கொண்டிருக்கும் சுமந்திரன் இந்த தந்தைக்கு நியாயம் கிடைக்க உதவுவாரா?

No comments:

Post a Comment