Thursday, June 29, 2017

மன்னார் கடற்படுக்கையில்

மன்னார் கடற்படுக்கையில்
•5 பில்லியன் கன அடி கச்சா எண்ணெய்
•9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு
இருப்பதாக இலங்கை அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
முழு இலங்கைக்கும் 60 வருடத்திற்கு போதுமான எரி பொருள் இது.
தமிழர் பகுதியில் இருக்கும் இத் தமிழர் வளத்தை தமிழரிடம் கேட்காமலே இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
எந்தவித டெண்டர் கோரலும் இன்றி பொது நடைமுறைக்கு மாறாக மன்னார் எண்ணெய் வளம் இந்திய கெயான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அந் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அகழ்ந்தெடுக்கும் எண்ணெயில் 10% மட்டுமே இலங்கைக்கு வழங்கப்படும். மீதி 90% இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த மோசடியான ஒப்பந்தம் குறித்து எந்த தமிழ் தலைவரும் இதுவரை குரல் கொடுக்கவில்லை.
மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குடும்பத்துடன் திருச்சியில் தங்கியுள்ளார். அவருக்கு வீடு மற்றும் சொத்துகள் அங்கு இருப்பதால் அவர் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் “இந்தியா போனால் சீனா வந்துவிடும். எனவே இந்தியாவே தாராளமாக கொள்ளையடிக்கட்டும்” என்பார்.
எனெனில் அவரும் குடும்பத்தோடு இந்தியாவில் தங்கியிருப்பது மட்டுமன்றி அவரது இருதய அறுவைக் சிகிச்சைகூட டில்லி மருத்துமனையில்தான் இந்திய அரசின் உதவியுடன் நடந்துள்ளது.
அடுத்து, தமிழரசுக்கட்சி தலைவர் மாவைசேனாதிராசாவின் 3 வீடுகளில் ஒரு வீடு இந்தியாவில்தான் உள்ளது. எனவே அவரும் இதில் எதாவது கமிசன் வருமா என்று பார்ப்பாரேயொழிய இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கமாட்டார்.
மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் “தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று அறிக்கை விட்டிட்டு பேசாமல் இருப்பார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தாங்களே இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற வேண்டுமாயின் சிங்கள முஸ்லிம் மக்களுடன் ஜக்கியப்பட்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment