Sunday, June 18, 2017

•தமிழ் மக்களை தலை குனிய வைத்த தலைவர்கள்!

•தமிழ் மக்களை தலை குனிய வைத்த தலைவர்கள்!
முள்ளிவாய்க்காலில் ஆயிரக் கணக்கில் மக்கள் கொன்றழிக்கப்பட்ட பின்பும்கூட தமிழ் மக்கள் உலக அரங்கில் தலை குனியவில்லை.
ஆனால் ஊழல் செய்த அமைச்சர்களை நீக்கியதற்காக முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தமிழ் மக்களை தலை குனிய வைத்து விட்டார்கள் தமிழ் தலைவர்கள்.
இதுவரை தமது உரிமைகளுக்காக போராடி வந்த தமிழ் மக்களை முதலமைச்சருக்காக போராட வேண்டிய அவல நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள்.
இதுவரை அரசுக்கு எதிராக கடையடைப்பை நடத்திய தமிழ் மக்கள் வரலாற்றில் முதன் முறையாக முதலமைச்சருக்காக கடையடைப்பு (ஹர்த்தால்) செய்ய வைத்துள்ளார்கள்.
இதுவரை தமிழ் மக்களின் உரிமைக்காக பாடசாலை பகிஸ்கரிப்பு செய்த மாணவர்களை முதன் முதலாக ஒரு முதலமைசருக்காக பாடசாலையை பகிஸ்கரிக்க வைத்துள்ளார்கள்.
இதுவரை தமது உரிமைகளுக்காக றோட்டில் இறங்கி ஊர்வலம் போன தமிழ் மக்களை முதலமைச்சருக்காக வெய்யிலில் ஊர்வலம் போக வைத்துள்ளார்கள்.
தமிழகத்தில் எமக்காக குரல் கொடுத்த திருமுருகன்காந்தி உட்பட தோழர்கள் குண்டர் சட்டத்தில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் எமது தலைவர்கள் ஊழல் செய்த அமைச்ர்களை நீக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சரை பதவி நீக்க முயல்கிறார்கள்.
என்னே கேவலம் இது?. இவர்கள் ஊழல் செய்து அனுபவிப்பதற்காகவா தமிழ் மக்கள் அயிரக் கணக்கில் தமது உயிர்களை அர்ப்பணித்தார்கள்?
தமிழ் மக்கள் தமது குருதியை சிந்தியது இந்த பதவி வெறிபிடித்த அயோக்கியர்கள் ஊழல் புரிவதை பார்த்துக் கொண்டு இருக்கவா?
இதுவரை மக்கள் போராடிய போது எல்லாம் வராத சம்பந்தர் அய்யா தமது சகபாடிகளுக்கு பதவி பறிபோகிறது என்றவுடன் ஓடோடி வந்து விட்டார்.
அமைச்சர் சத்தயலிங்கம் மீதான நடவடிக்கையை கைவிட்டால் முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிடுவதாக சம்பந்தர் அய்யா பேரம் பேசுகிறார்.
இந்த அமைச்சர் சத்யலிங்கம் பதவி ஏற்றவுடன் செய்த வேலை, தனது தம்பிக்கு வவுனியா செயலாளர் பதவி. தனது மனைவிக்கு செயலாளர் பதவி. இவர் வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறுகிறார். பெறாமகனுக்கு வவுனியா அலுவல உதவியாளர் பதவி, தனது மைத்துனனுக்கு சாரதி பதவி, தனது கிளினிக்கில் வேலை செய்தவருக்கு அந்தரங்க காரியதரிசி பதவி.
இப்படி தன் குடும்ப உறவினர்களுக்கு எல்லாம் பதவி கொடுத்தது மட்டுமன்றி மருத்துவ உபகரணங்கள் இறக்குமதியிலும் பெருமளவு ஊழல் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்து.
இந்த ஊழல் அமைச்சரைக் காப்பாற்றவே கொழும்பில் இருந்து ஓடோடி வந்து தலைவர் சம்பந்தர் அய்யா முயற்சி செய்கிறார்.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறி பதவியை பெற்றவர்கள். தீர்வு பெற்று தராவிட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்களுக்கு தலை குனிவை தராமலாவது இருந்திருக்கலாம்.
தனிநாடு கோரியவர்கள். ஒரு மாகாணசபையையே நடத்த தெரியவில்லையே என்று ஒரு சிங்கள ஊடகவியலாளர் தன்னிடம் கேட்டதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியிருந்தார்.
உண்மைதான். எமது தலைவர்கள் தமிழ் மக்களுக்கு மாபெரும் களங்கத்தை கொடுத்துவிட்டார்கள். வரலாற்றில் முதன் முறையாக தமிழன் தலை குனிய வேண்டியேற்பட்டுள்ளது.
ஆனால் இந்த தீமையிலும் ஒரு நன்மை நடந்துள்ளது. இதுவரை சிலர், அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றது தவறாக இருக்குமோ என எண்ணி வந்தனர். ஆனால் அவர்களும் இப்போது அது சரிதான் என்ற முடிவுக்கு வருவதற்கு இந்த தலைவர்கள் உதவி புரிந்துள்ளார்கள்.
தமிழ் மக்களுக்காக தலைவர்களா? அல்லது
தலைவர்களுக்காக மக்களா? என்ற கேள்வியை காலம் எழுப்பியுள்ளது.
ஆனால் மக்களுக்காகவே தலைவர்கள் என்று தமிழ் மக்கள் வரலாற்றில் மீண்டும் நிரூபிப்பார்கள்.

No comments:

Post a Comment