Sunday, June 18, 2017

பீகார் மாநிலத்தில் இருந்து பாணிப்பூரி விற்று பிழைக்க வந்த குடும்பம்

பீகார் மாநிலத்தில் இருந்து பாணிப்பூரி விற்று பிழைக்க வந்த குடும்பம் கூறுகிறது “ இந்தி படிக்காததால் தமிழகம் 50 வருடம் பின்தங்கிவிட்டதாம்”
தமிழ்நாட்டிற்கு வந்து தமிழில் பிழைப்பு நடத்திக்கொண்டு கூறுகிறார்கள் “இந்தி படிப்பது அவசியம்”என்று.
பாண்டே மட்டுமல்ல “துக்ளக்” என்னும் பத்திரிகையை தமிழில் நடத்திய சோ வும் இறக்கும்வரை இதையே கூறினார். ஆனால் அவர் துக்ளக் இதழில் ஒரு பக்கம் கூட இந்தி மொழியில் எழுதியதில்லை.
நடிகர் எஸ.வி.சேகர் கூட இதேயே கூறி வருகிறார். ஆனால் அவர் ஒரு நாடகம்கூட இந்தி மொழியில் போட்டு சம்பாதிக்கவில்லை.
இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மொழியில் சம்பாதித்துக்கொண்டு இந்தி மொழிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.
இவர்களால் கேரளாவில் போய் இந்தி படிக்காததால் கேரளா 50 வருடம் பின்தங்கிவிட்டது என்று கூறமுடியுமா?
இவர்களால் கர்நாடகா சென்று இந்தி படிக்காததால் கர்நாடகா 50 வருடம் பின்தங்கிவிட்டது என்று கூறமுடியுமா?
தமிழ்நாட்டில் வந்து தமிழால் சம்பாதித்துக்கொண்டு தமிழ் மொழிக்கு எதிராக எப்படி இவர்களால் பேச முடிகிறது?
தமிழன் என்ன இழிச்சவாயன் என்று நினைக்கிறார்களா? என்ன சொன்னாலும் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டு பேசாமல் இருப்பான் என்று நினைக்கிறார்களா?
தமிழன் தலை நிமிரும் காலம் இது. இனி இப்படியானவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை உணர்த்த வேண்டிய காலம் வந்துவிட்டது.
அடி வாங்கிக்கொண்டு அடிமையாக இருந்த காலம் போய்விடட்டது. இனி திருப்பியடிக்கும் காலம் வந்து விட்டது.
தமிழா இன உணர்வு கொள்!

No comments:

Post a Comment