Sunday, June 18, 2017

• எமதர்மராசாவும் ஊழல் பேர்வழிகளும்

• எமதர்மராசாவும் ஊழல் பேர்வழிகளும்
காட்சி -1
இடம்- எமதர்மனின் அலுவலகம்.
எமதர்மன் , சித்ரகுப்தனிடம் , "இனிமேல் ஊழல் பேர்வழிகளின் நாக்கை மட்டும் வெட்டி எடுத்து வா என்று உத்தரவிட்டிருந்தான்.
அதுபோல் சித்ரகுப்தனும் யாழ்ப்பாணத்தில் இருந்து 5 நாக்குகளை அறுத்துக்கொண்டு வந்தான் .
அதில் நான்கு நாக்கு இரட்டை நாக்காக இருப்பதைக் கண்ட எமன் அது ஏன் என்று சித்திரகுப்தனிடம் கேட்டான்.
அதற்கு சித்திரகுப்தன் “ அது மாகாண அமைச்சர்களின் நாக்கு. அவர்கள் மக்கள் முன்னாடி ஒரு நாக்காலும் மக்கள் பின்னாடி இன்னொரு நாக்காலும் கதைப்பவர்கள். அதனால் அவர்களுக்கு இரட்டை நாக்கு உள்ளது “ என்றான்.
“அது சரி. ஒரு நாக்கு இப்பவும் துடிக்கிறதே . அது யாருடைய நாக்கு?” என்று எமதர்மராசா கேட்டார்.
“அது அவைத் தலைவர் சிவஞானம் அவர்களுடைய நாக்கு. தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று துடிக்குது” என்றான் சித்திரகுப்தன்.
“அது சரி. அதற்கு ஏன் அது சிங்கள மொழியில் துடிக்குது?” என்று ஆச்சரியமாக எமதர்மராசா கேட்டார்.
“பதவி வேண்டும் என்றால் அந்த நாக்கு பாரசீக மொழியிலும் துடிக்கும்” என்று அமைதியாக கூறினான் சித்திரகுப்தன்.
இவனுகளுக்கு வாக்கு போட்ட தமிழ் மக்கள் பாவம் என்று எமதர்மனே இரங்கி பெருமூச்சு விட்டான்.
காட்சி -2
இடம் - சம்பந்தர் அய்யாவின் சிறிய(?) அறை
சுமந்திரன்- மாகாண சபை பிரச்சனை பற்றி மக்களுக்கு என்ன சொல்வது?
சம்பந்தர் அய்யா- அது ஒரு சின்ன பிரச்சனை. பெரிய பிரச்சனை இல்லை என்று கூறுங்கள்.
சுமந்திரன்- சித்திரகுப்தன் எல்லோருடைய நாக்கையும் வெட்டி எடுப்பதாக தகவல் வருகிறது அய்யா.
சம்பந்தர் அய்யா- நாக்கை வெட்டுவினமோ இல்லை எந்த கருமத்தை வெட்டினாலும் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் எனது பதவியை மட்டும் வெட்டக்கூடாது. சொல்லிப் போட்டன்.
சுமந்திரன்- இனி தமிழ் மக்களுக்கு என்ன சொல்வது அய்யா?
சம்பந்தர் அய்யா- இரண்டு மணித்தியாலத்தில் நல்ல செய்தி வரும் என்று அறிக்கை விடுங்கோ.
சுமந்திரன்- ஏற்கனவே ஒரு வருடத்தில் தீர்வு என்று கூறி ஏமாற்றி விட்டோம். பின்னர் இரு வாரங்களில் நலல் செய்தி வரும் என்று சொல்லி ஏமாற்றிப் போட்டம். இனி என்ன சொன்னாலும் தமிழ் மக்கள் எங்களை நம்பாது அய்யா.
சம்பந்தர் அய்யா- உண்மை மாதிரி பீல் பண்ணி சொல்லணும். உணர்சிவசமாக இரண்டு வசனம் சேர்த்துக்க. நம்பிடுவாங்க.
காட்சி-3
இடம்- தமிழரசுக் கட்சி காரியாலயம்.
ஊழலுக்கு எதிராகவே முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று சுமந்திரன் கூறிக்கொண்டிருக்க வெளியில் இருந்த மக்கள் கூட்டத்தில் இருந்து ஒரு பிய்ந்த செருப்பு அவர் முகத்தில் வீசப்பட்டது.
உடனே அவர் அருகில் இருந்த சயந்தன் “வாங்கண்ணை . ஓடி தப்புவம். இல்லையென்றால் இவனுகள் மிதித்தே கொன்றுவிடுவாங்கள்” என்றார்.
அடுத்த நிமிடம் இருவரும் எஸ்கேப்!

No comments:

Post a Comment