Thursday, June 29, 2017

•ஒரு ஈழத் தமிழன் கருணைக் கொலை கேட்கிறான்!

•ஒரு ஈழத் தமிழன் கருணைக் கொலை கேட்கிறான்!
செய்தி- 26 வருடங்களாக இந்திய சிறையில் அடைபட்டிருக்கும் ரொபர்ட் பயஸ் என்ற ஈழத் தமிழன் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு கோரியுள்ளார்.
சகோதரா ராபட் பயஸ்!
எங்களை மன்னித்துவிடு.
நாங்கள்; தெரிவு செய்த ஒரு அமைசர் மக்களின் குடி தண்ணீரிலேயே விளையாடியுள்ளார்.
நாங்கள் தெரிவு செய்த இன்னொரு அமைசர் மக்களின் உயிர் காக்கும் மருந்து உபகரணங்களில் விளையாடியுள்ளார்.
இந்த அமைச்சரை ஒரு மாதம் விடுமுறையில் போகும்படி முதலமைசர் கேட்டவுடன் எம்.பி சாந்தி அக்கா தமிழ் தேசியத்திற்கு ஆபத்து வந்துவிட்டது என்று ஊர்வலம் போகின்றா.
பதவி ஏற்று இதுவரை எந்தப் பிரச்சனைக்கும் வாய்திறவாத இந்த எம்.பி அக்கா இப்ப ஊழல் அமைச்சருக்கு ஆதரவாக முழக்கம் போடுகின்றா.
போனஸ் எம்.பி யாக பதவி ஏற்று ஒரு வருடம்தான் ஆகியிருக்கு. ஆனால் அதற்குள்ள சொகுசு வாகனம் மூலம் 5 கோடி ரூபா சம்பாதித்து விட்டா இந்த அக்கா.
இன்னொருவர் வல்வெட்டித்துறையில் பட்டம் விட்ட அமைசர். தன்மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனே அவர் தமிழரசுக்கட்சிக்கு மாறிவிட்டார்.
அமைச்சர்கள் என்ன தவறு செய்தாலும் பரவாயில்லை. பதவியை ராஜினாமா செய்தால் போதும் என்று முதலமைச்சர் கெஞ்சுகிறார்.
“மோசடி செய்வது எங்கள் தன்னுரிமை. அதைத் தடுப்பதா?” என பொங்கியெழுந்த 22 உறுப்பினர்கள் முதலமைச்சரை நீக்கும்படி ஆளுநரிடம் கேட்டார்கள்.
தனக்கு 90000ரூபாவில் மூன்று சொகுசு ஆசனங்களை வாங்கியதைத் தவிர வேறு எதையும் இதவரை செய்யாத அவைத் தலைவர் ஆளுநரிடம் சிங்களத்தில் உரையாடுகிறார்.
பாவம் தமிழ் மக்கள். ஒருபுறம் தமது உரிமைக்காக போராடிக்கொண்டு மறுபுறம் முதலமைச்சருக்காக போராட வேண்டிய நிலை.
இதுதான் இன்றைய எமது தலைவர்களின் நிலை. எமது தலைவர்கள் தமது பதவி நலன்களைக் காப்பாற்றவே செயற்படுகிறார்கள்.
எனவே உனக்காக குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை.
நாங்கள் தெரிவு செய்த எமது தலைவர்களே உன்னைக் கைவிட்ட பிறகு தமிழக தலைவர்களை எந்த முகத்துடன் நாங்கள் கேட்பது?
மீண்டும் கேட்கிறோம். எங்களை மன்னித்துவிடு.
ஆனால் மனம் தளர்ந்துவிடாதே. தமிழக மக்கள் மீது நம்பிக்கை கொள்.அவர்கள் உன்னை நிச்சயம் விடுதலை செய்வார்கள்.
தங்கள் உயிரைக் கொடுத்து உங்களை தூக்குக்கயிற்றில் இருந்து காப்பாற்றிய செங்கொடி போன்றவர்கள் உள்ள மக்கள் அது.

No comments:

Post a Comment