Thursday, June 29, 2017

•படுகொலை செய்யப்பட்ட வித்யாவுக்கு நீதி கிடைக்குமா?

•படுகொலை செய்யப்பட்ட வித்யாவுக்கு நீதி கிடைக்குமா?
மாணவி வித்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக கைது செய்யப்ட்டுள்ள 9 எதிரிகள் மீது 41 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வெளிநாடு ஒன்றில் பல மில்லியன் ரூபாவில் செய்துகொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த குற்றச் சம்பவம நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டாக சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்தது மட்டுமன்றி அதை படமாக்கி வெளிநாட்டில் உடன் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது.
இது காம இச்சையில் நடந்த குற்றம் இல்ல. இது போதையில் நடந்த குற்றம் அல்ல. இது நன்கு திட்டமிட்டு வெளிநாட்டு வியாபார ஒப்பந்தத்திற்காக நடந்த குற்றச் சம்பவம்.
இது மிகவும் ஆபத்தான கொடிய வியாபாரம். இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இல்லையேல் அப்பாவி பள்ளி மாணவிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் அற்ற நிலை வந்துவிடும்.
இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் பண வசதி படைத்தவர்கள். அவர்களை காப்பாற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொழும்பு முக்கியஸ்தர் தமிழ்மாறன்( சட்டப் பேராசிரியர்) யாழ்ப்பாணம் வந்து முயற்சி செய்தார்.
விசாரணை நடக்கும்போது விசாரணை அதிகாரிக்கே 20 மில்லியன் ரூபா லஞ்சம் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.
நீதிமன்ற வளாகத்திலேயே வித்யாவின் தாயாரை மிரட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி ஊடகவியலாளர்களைக்கூட மிரட்டியிருக்கிறார்கள்.
ஆரம்பத்திலேயே விசாரணைக்கு ஒரு சாட்சி சமூகமளிக்கவில்லை. அவருக்கு நீதிமன்றம் பிடிவிராந்து போட்டுள்ளது. அந்த சாட்சி எதிரிகளால் மிரட்டப்பட்டிருக்கலாம் அல்லது பணம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கலாம்.
எதிரிகள் தமது பண செல்வாக்கின் மூலம் தண்டனையில் இருந்து தப்பிக்க பார்க்கிறார்கள்
எனவே தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பதன் மூலமே வித்யாவுக்கு நீதி கிடைக்க வழி செய்ய முடியும்.

No comments:

Post a Comment