Thursday, June 29, 2017

மடியில் கனம் இல்லை எனில் நடையில் பயம் எதற்கு அமைச்சர்களே!

•மடியில் கனம் இல்லை எனில்
நடையில் பயம் எதற்கு அமைச்சர்களே!
அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரன் ஆகியோர் முதலமைச்சரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று சம்பந்தர் அய்யா வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இப்போது சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கூறுகிறார்கள்.
தனது வாக்குறுதி மீறப்பட்டது குறித்து இனி சம்பந்தர் அய்யா என்ன கூறப்போகிறாரோ தெரியவில்லை.
ஆனால் இந்த முன்னாள் அமைச்சர்கள் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதுமல்லாமல் அது குறித்த விசாரணையில் கலந்து கொள்ளமாட்டோம் என தைரியமாக கூறுவது தமிழ் மக்களுக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும்.
தன்மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் இரட்டி மடங்காக அந்த தொகையை கட்டுவேன் என பேட்டி கொடுக்கும் டெனீஸ்வரன் விசாரணைக்கு ஏன் ஒத்துழைக்க மறுக்கிறார்?
சத்தியலிங்கம் தான் நிரபராதி என்று கருதினால் ஏன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்?
இதுவரை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எந்த ஒரு அரசியல்வாதியும் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்று பகிரங்கமாக கூறியதில்லை.
ஆனால் இந்த வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் இருவரும் ஊழல் மோசடிகள் பரிந்தது மட்டுமன்றி அது குறித்த விசாரணைக்கும் ஒத்துழைக்க மாட்டோம் என பகிரங்கமாக தைரியமாக கூறுகிறார்கள்.
மடியில் கனம் இல்லை என்றால் நடையில் பயம் எதற்கு? தப்பு செய்ய வில்லை என்றால் ஏன் விசாரணைக்கு அஞ்ச வேண்டும்?
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்களுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று கடும் எச்சரிக்கை செய்துள்ளது.
வயிற்றுப் பிழைப்பிற்காக உடலை விற்ற பெண்கள் மீது கடும் எச்சரிக்கை செய்யும் இந்த நீதிமன்றம் இந்த அமைச்சர்களின் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் மாகாண அமைச்சர்கள் மட்டும் விதிவிலக்கு?

No comments:

Post a Comment