Monday, March 19, 2018

•1460 நாட்களாக இவர்கள் மதுரைசிறையில் வாடுவது ஏன்?

•1460 நாட்களாக இவர்கள் மதுரைசிறையில் வாடுவது ஏன்?
கடந்த 10.03.2014 யன்று திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், கார்த்திக் ஆகிய ஆறுபேரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
நான்கு வருடங்களாகியும் இவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடிக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்து வருகின்றது தமிழக கியூ பிராஞ் பொலிஸ்.
இந்நிலையில் தமிழரசன் என்பவருக்கு 4 மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
பொதுவாக ஒரு வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்ட்டால் அதனைக்காட்டி மற்றவர்களுக்கும் ஜாமீன் வழங்குவது மரபாக இருக்கிறது.
ஆனால் இவர்களுக்கு அவ்வாறு ஜாமீன் வழங்க மறுத்து வருவதுடன் வழக்கு விசாரணையையும் முடிக்காமல் தாமதப்படுத்தப்படுகிறது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். நான்கு வருடங்களாக இவர்களுக்குரிய நீதியும் மறுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இவர்களுக்குரிய நீதி மறுக்கப்படுவதற்கு இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?
கொடிய சிறையில் நீண்ட நாட்கள் அடைத்து வைக்து சித்திரவதை அனுபவிப்பதற்கு இவர்கள் செய்த தவறு என்ன?
தமிழ் இனம் விடுதலை பெற வேண்டும் என்று விரும்பியதைத் தவிர வேறு எந்த தவறையும் இவர்கள் செய்யவில்லை.
கோடி கோடியாக ஊழல் செய்தவனும் வங்கியை ஏமாற்றியவனும் சுதந்திரமாக வெளியில் நடமாடும்போது நான்கு வருடங்களாக எந்தவித விசாரணையும் இன்றி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிறார்கள். ஆனால் இங்கே குற்றவாளிகள் தப்புகிறார்கள். தமிழ் இன உணர்வாளர்கள் தண்டிக்கப்டுகிறார்கள்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயமும் தமிழ் இன உணர்வாளர்களுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
இவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. ஆனால் அதற்குரிய மருந்து சிறையில் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. உறவினர்கள் வாங்கிச் சென்று கொடுக்க முனைந்தாலும் அதையும் அனுமதிப்பதில்லை.
இவர்களில் இன்னொருவருக்கு அண்மையில் நெஞ்சுவலி மற்றும் தோல் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. அதற்குகூட சிறையில் உரிய நேரத்தில் மருத்துவம் வழங்கபப்படவில்லை.
ஜாமீனும் வழங்கப்படவில்லை. உறவினர்கள் பார்வையிடவும் இலகுவாக அனுமதிப்பதில்லை. உறவினர்கள் நீதிமன்றத்தில் சென்று பார்வையிடவோ பேசவோ அனுமதிப்பதில்லை.
இவர்கள் தமது குழந்தைகளைக்கூட தூக்கி கொஞ்சக்கூட பொலிசார் இவர்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை.
இத்தனை கடுமையாக நடக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை கொடுமை செய்யப்படுவது எதற்காக?
இவர்களை விரக்தியடைய செய்ய வேண்டும். இவர்கள் உறவினர்களை மிரட்ட வேண்டும். இதைப் பார்த்து இன்னொருவர் போராட்டத்திற்கு வர நினைக்கக்கூடாது.
இதற்காகத்தானே கியூ பிரிவு உளவுப் பொலிசார் சட்ட விரோதமாக இத்தனை கொடுமைகளையும் செய்கிறார்கள்?
ஆனால் போராளிகளை கொல்வதன் மூலமோ அல்லது கொடுமைப்படுத்துவதன் மூலமோ போராட்டத்தை ஒழிக்க முடியாது. மாறாக அது மேலும் மேலும் வீறு கொண்டு வளரும்.
இவர்களின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்!
சிறையில் அடைப்பதன் மூலம் தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க முடியாது என்பதை காட்டுவோம்.!!

No comments:

Post a Comment