Monday, March 19, 2018

ஆறு வித்தியாசங்கள் தருக

இந்த இரண்டு படங்களையும் பதிவிட்டு ஆறு வித்தியாசங்கள் தருக என்று கேட்கவே விரும்பியிருந்தேன்.
ஆனால் சுமந்திரனுடன் குரங்கை ஒப்பிட்டு குரங்கு இனத்தை நான் கேவலப்படுத்திவிட்டதாக பலர் என்மீது கோபம் கொள்ளக்கூடும் என்பதால் அதனை தவிர்த்துவிட்டேன்.
சுமந்திரன் ஜ.நா வில் கலங்துகொள்ள அமெரிக்கா சென்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
முதலில் நடந்தது இனப்படுகொலை அல்ல. வெறும் போர்க்குற்றம் என்றார்.
பின்னர் சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றார்.
அதன்பின்னர் இலங்கை அரசு கேட்காமலே இரண்டு வருட அவகாசம் பெற்றுக்கொடுத்தார்.
இம்முறை என்ன செய்யப் போகின்றார் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு ஆதரவாக எதையும் செய்யமாட்டார் என்றுமட்டும் உறுதியாக தெரியும்.
“துரோகத்தை அனுபவிக்கறது கூட கஷ்டமில்லை ஆனால் துரோகியின் சிரிப்பைச் சந்திக்கிறது ரொம்ப கொடுமை” என்றார் ஜெயகாந்தன்.
ஈழத் தமிழர்களுக்கு 2018ல் இப்படி ஒரு நிலைமை வரும் என்று அப்பவே ஜெயகாந்தனுக்கு தெரிந்திருந்தா தெரியவில்லை.
ஆனால் சுமந்திரனின் சிரிப்பை ஈழத் தமிழர்கள் சகித்துக்கொள்ள வேண்டியது உண்மையில் கொடுமைதான்.

No comments:

Post a Comment