Saturday, March 31, 2018

சபா அவர்கள் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
லண்டனில் இருக்கும் சபா அவர்கள் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சபா அவர்கள் 1991ம் ஆண்டு முதல் 1995வரை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் பின்பு சில மாதங்கள் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார்.
7 வருட சிறைவாழ்க்கையின் பின் அவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் அவர் சில காலம் கம்போடியா என்னும் நாட்டில் இருந்தார்.
இந்தியாவில் இருந்து 8 வருட சிறை வாழ்க்கையின் பின் நான் வெளியேற்றப்பட்டபோது சில மாதங்கள் கம்போடியாவில் தங்க நேரிட்டது. அப்போது சபா அவர்கள் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார். ( அப்போது எடுக்கப்பட்ட போட்டோவே கீழே பகிரப்பட்டுள்ளது.)
எனது நூல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சபா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
பாலன் முதல் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூலைப் படித்திருக்கிறேன்.
அதில் குறிப்பிட்டுள்ள துறையூர் சிறப்புமுகாம் மற்றும் வேலூர் சிறப்பு முகாம்களில் நானும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன்.
என் போன்ற அகதிகள் அனுபவித்த கொடுமையை அந்த நூலில் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.
நான் திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்தவேளை தென்தமிழன் போன்றவர்களை கண்டிருக்கிறேன்.
துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை பாலன் மூலம் தமிழ்நாடு விடுதலை படை பற்றி ஓரளவு அறிந்துகொண்டேன்.
ஆனால் அவர் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலைப் படித்தபின்பே முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது.
தமிழரசன், கலியபெருமாள், சுந்தரம், லெனின் போன்றவர்களை இந் நூல் மூலம் சிறந்த முறையில் ஈழத் தமிழர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஈழத் தமிழர்களும் படிக்க வேண்டிய நூல் இதுவாகும். இதுபோல் பயன் உள்ள நூல்களை அவர் தொடர்ந்து தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

No comments:

Post a Comment