Monday, March 19, 2018

மாவோயிஸ்ட்டுகள் தேசவிரோதிகள் அல்லர்

•மாவோயிஸ்ட்டுகள் தேசவிரோதிகள் அல்லர்
அவர்களே உண்மையான தேச பக்தர்கள்!
நக்சலைட்டுகள் தேசவிரோதிகள் அல்லர். அவர்கள் தேச பக்தர்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஒருவர் மாவோயிஸ்ட் என்பதற்காக அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கேரள உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.
ஆனால் கடந்த வருடம் தமிழகத்தைச் சேர்ந்த பெண் சட்டத்தரணியும் இன்னொருவரும் மாவோயிஸ்ட் என்று கூறி கேரள பொலிஸ் சுட்டுக்கொன்றது.
இரு தினங்களுக்கு முன்னர் தெலுங்கானா சதீஸ்கர் எல்லையில் 12 பேர் மாவோயிஸ்ட் என தெலுங்கானா பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்னர். இதில் 6 பேர் பெண்கள்.
இது மோதலில் கொல்லப்பட்டவர்கள் என்று பொலிசார் கூறியிருந்தபோதும் பேச்சுவார்த்தைக்காக அழைத்து போலி மோதலில் கொல்லப்பட்டவர்கள் என்று ஆந்திர மாநில மனிதவுரிமைக் கழகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒருவரை மாவோயிஸ்ட் என்று கூறிவிட்டு எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்லலாம் என்று இந்திய அரசு கருதுகிறது.
இந்திய அரசின் இந்த சட்டவிரோத செயற்பாட்டை நீதிமன்றங்கள் மட்டுமல்ல ஊடகங்களும் கண்டிக்காமல் ஏற்றுக்கொள்கின்றன.
பெரும் முதலாளிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஏமாற்றி சுருட்டிக்கொண்டு வெளிநாடு ஓடிவிடுகின்றனர்.
அவ் முதலாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசு மக்களுக்காக போராடும் மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொல்லுகின்றன.
தற்போது சுமார் 6 மாநிலங்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஆயுதபாணிகளாக இருக்கின்றனர்.
சுமார் 120 மாவட்டங்களில் அவர்களுடைய ஆட்சியின் கீழேயே இருக்கின்றது. அங்கெல்லாம் அவர்களது நிர்வாகம், கல்வி, நீதி. விசாரணை நடக்கிறது.
மாவோயிஸ்டுகளை ஒடுக்கி காடுகளில் உள்ள கனிம வளங்களை அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு விற்பதற்கு அரசு முயலுகின்றது.
ஆனால் இந்திய அரசின் நோக்கம் இனி ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.
வெகு விரைவில் பதிலடி வழங்கப்படும்.

No comments:

Post a Comment