Saturday, March 31, 2018

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தேவாரத்திற்கு

•ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தேவாரத்திற்கு
எதற்காக 7 காவலர்களை அரசு வழங்கி வருகிறது?
ஓய்வு பெற்ற ஒருவர் ஒரு அரசு பணியாளரைப் பயன்படுத்துவதே குற்றம். ஆனால் ஓய்வு பெற்ற தேவாரம் 7 அரச பணியாளர்களை பயன்படுத்தி வருகிறார்.
பொலிஸ் கமிஷனராக இருந்த வால்டர் தேவாரம் கடந்த 31.07.1997 யன்று ஊய்வு பெற்றார். ஓய்வுபெற்ற பின்பு கடந்த 21 வருடமாக அவர் அரச பணியாளர்களை பயன்படுத்தி வருகிறார்.
இவரிடம் இருக்கும் 3 வாகனங்களை ஓட்டுவதற்கு 3 காவலர்கள், இதர பணிகளுக்கு 3 காவலர்கள், மற்றும் உதவியாளர் ஒருவர் என மொத்தம் 7 காவலர்கள் இவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸ் பற்றாக்குறையாக இருக்கிறது என்று கூறிக்கொண்டு மறுபுறத்தில் ஓய்வுபெற்ற அதிகாரிக்கு எதற்காக 7 காவலர்களை வழங்க வேண்டும்?
ஒருபுறத்தில் அரசியல்வாதிகளின் குடும்பங்களின் வேலைகளை கவனிக்க பொலிசார் நியமிக்கப்படுகிறார்கள். மறுபுறத்தில் அதிகாரிகளின் குடும்ப வேலைகளைக் கவனிக்க பொலிசார் நியமிக்கப்படுகிறார்கள்.
மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வழங்கப்படும் பொலிசார் மக்களுக்கு சேவை செய்யாமல் அதிகாரிகளுக்கு எதற்காக வேலை செய்ய வேண்டும்?
இதுகுறித்து நீதிமன்றங்களும் கண்டு கொள்ளமாட்டாது. ஏனெனில் நீதிபதிகளின் குடும்ப வேலைகளைக்கூட கவனிப்பதற்கும் பொலிசார் நியமிக்கப்படுகிறார்கள்.
வால்டர் தேவாரம் பதவியில் இருக்கும்போது தர்மபுரியில் நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் 40க்கு மேற்பட்ட இளைஞர்களை சுட்டுக் கொன்றார்.
அதன்பின்பு வேலுர் கோட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருந்து ஈழத்து அகதி இளைஞர் இருவரை சுட்டுக் கொன்றார்.
அதன்பின்னர் வேதாரணியத்தில் கோடியாக்கரை சண்முகம் என்பவரை அடித்துக் கொன்றுவிட்டு தற்கொலை என பொய் கூறினார்.
இவர் பதவியில் இருக்கும்போது இன்னொரு அதிகாரியின் மனைவியோடு கள்ள உறவு கொண்டார். இதனால் பொலிஸ்துறையே இரண்டாக பிரிந்து அடித்துக் கொண்ட செய்தி ஜீனியர் விகடனில் பிரசுரமாகியது.
இத்தகைய மோசமான அதிகாரியை கொல்ல வேண்டும் என்று தோழர் தமிழரசன் பல தடவை முயன்றார்.
இத்தகைய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு மக்கள் பணத்தில் 7 காவலர்களை அரசு எதற்காக வழங்கி வருகிறது?
இந்த அநியாயத்தை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்களா?

No comments:

Post a Comment