Monday, March 19, 2018

கேப்பாப்புலவு மக்கள் மனம் தளராமல் தொடர்ந்து போராட வேண்டும்

செய்தி- கேப்பாப்புலவு மக்கள் மனம் தளராமல் தொடர்ந்து போராட வேண்டும் - சம்பந்தர் அய்யா
தமது நிலத்தை திரும்பவும் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் 365 நாட்களாக போராடி வருகின்றனர்.
தமது போராட்டம் ஒரு வருடமாகியதை முன்னிட்டு சம்பந்தர் அய்யாவை மக்கள் தொடர்பு கொண்டபோது “ தொடர்ந்து போராடுங்கள். விரைவில் கிடைக்க வழி செய்யப்படும்” என கூறியுள்ளார்.
வீதியோரத்தில் படுத்து அறவழியில் போராட்டம் நடத்தும் இந்த கேப்பாபுலவு குழந்தைக்கு சில வரிகள்,
ஏய் குழந்தையே!
வழக்கமாக தலைவர் சம்பந்தர் அய்யாவுக்கு
மக்கள் தம் குறைகள் சொல்லும்போது
காது கேட்காது. கண் தெரியாது.
அதிசயம். ஆனால் உண்மை.
இம் முறை கேப்பாப்புலவு மக்கள்
அவரை தொடர்பு கொண்டபோது
கண்கள் தெரிந்துள்ளது. காது கேட்டுள்ளது.
அதைவிட “திறப்பு தன்னிடம் இல்லை” என்று
கிண்டலாக பதில் எதுவும் சொல்லவும் இல்லை.
தனக்கு பதவி, பங்களா, சொகுசு வாகனம்
கேட்டு வாங்கிய சம்பந்தர் அய்யாவால்
உனக்கு நிலம் வாங்கி தர முடியவில்லை?
வெளிநாடுகளில் இருந்த தன் பிள்ளைகளை
அழைத்து தன்னுடன் வைத்திருப்பவர்
நீயும் உன் பெற்றோருடன் சொந்த வீட்டில்
ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை?
தன் நிலம் கேட்டு வீதியோரத்தில் படுத்து
ஒரு வருடம் அறவழியில் போராட்டம்
நடத்திய பெருமை உலகில் உனக்கு மட்டுமே
லண்டனில் போராடியவர்கள் புலிக்கொடி
ஏந்திவிட்டார்கள் என்று ஒப்பாரி வைத்தவர்கள்
எந்தக் கொடியும் ஏந்தாமல் ஒரு வருடமாக
நீ போராடுவது குறித்து எதுவும் கூறாமல்
வாய் பொத்தி மௌனமாக இருக்கிறார்களே?
புலிகள் ஆயும் ஏந்திப் போராடியதால்
அழிக்கப்பட்டார்கள் என்று நியாயம் கூறியவர்கள்
அறவழியில் நீ ஒரு வருடமாக போராடியும்
கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே?
புலிகளில் சிறுவர்கள் இருந்தபோது
“குழந்தைப் போராளி” என்று கூச்சல் இட்ட
ஜ.நா மன்றமும்கூட
சிறுமி நீ ஒரு வருடமாக வீதியோரத்தில்
படுத்திருப்பதைக் கண்டுகொள்ளவில்லையே?
ஆனால்,
மீண்டும் ஒரு உண்மையை நீ
எமக்கு கற்றுத் தருகிறாய்.
அது, போராடாமல் எதுவும் எமக்கு கிடைக்காது என்பதையே.

No comments:

Post a Comment