Saturday, March 31, 2018

•துப்பாக்கி தூக்கிய கரங்கள் குடை பிடிக்கும் துரதிருஷ்டம்!

•துப்பாக்கி தூக்கிய கரங்கள்
குடை பிடிக்கும் துரதிருஷ்டம்!
1983 முதல் 2009 வரை பல சினிமா பிரபலங்கள் யாழ் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் தமிழ் இளைஞர்கள் குடை பிடித்ததில்லை.
பாரதிராஜா , மகேந்திரன், என பல சினிமா ஜாம்பவான்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு யாரும் குடை பிடிக்கவில்லை.
ஏனெனில் அப்போது நம் இளைஞர்கள் தம் கரங்களில் ஆயுதம் ஏந்தியிருந்தனர். அவர்கள் தாங்களும் குடை பிடிக்கவில்லை. மற்றவர்களையும் குடை பிடிக்க விடவில்லை.
அண்மையில் நடிகர் ஆர்யா யாழ்ப்பாணம் வந்தபோது அவருக்கு ஒரு இளைஞர் குடை பிடித்திருந்தார்.
உண்மைதான். துப்பாக்கயை ஏந்திய பெருமை மிக்க வரலாற்றை படைத்த நம் இளைஞர்கள் கரங்கள் இன்று மற்றவருக்கு குடை பிடிக்கும் நிலைக்கு சென்றமை வருத்தத்திற்குரிய விடயம்தான்.
ஆனால் இதற்கு காரணம் இன்றைய எமது தலைமைகள்தான். இன்றைய தலைமைகள் மற்றவருக்கு குடை பிடிப்பதை கேவலம் என்று சொல்லித் தருவதில்லை.
மாறாக தமக்கும் குடை பிடிப்பிக்கிறார்கள். கூடவே நடிகருக்கும் குடை பிடிப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
புலிகளின் காலத்தில் பலமுறை சம்பந்தர் அய்யா வன்னி சென்றிருக்கிறார். ஆனால் ஒருமுறைகூட அவருக்கு யாரும் குடை பிடிக்கவில்லை.
புலிகளின் காலத்தில் தமக்குத்தாமே குடை பிடித்த எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் புலிகள் இல்லை என்றவுடன் தமக்கு குடை பிடிக்க இன்னொருவரை நியமித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதிகூட தன் கையால் தனக்கு குடை பிடிக்கும்போது எமது தலைவர்களோ தமக்கு குடை பிடிக்க இன்னொருவரை வைத்திருக்கின்றனர்.
இதில் கேவலம் என்னவென்றால் இவர்களுக்கு குடை பிடிப்பவருக்கு மக்களின் வரிப் பணத்தில் அரசு சம்பளம் வழங்குகிறது.
இந்த அநியாயத்தை மக்கள் தடுத்து நிறுத்தியிருந்தால் நடிகர் ஆர்யாவுக்கு ஒரு இளைஞர் குடை பிடிக்கும் அவலம் நிகழ்ந்திருக்காது.
இன்று தமிழ்மக்களுக்கான ஒரு தலைமை இல்லாததே இதற்கு காரணம் ஆகும். தமிழ் மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளாக இருக்கின்றனர்.

LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment