Tuesday, August 15, 2023

நடந்தது போர்க்குற்றம் என்றுகூட

நடந்தது போர்க்குற்றம் என்றுகூட இதுவரை இந்திய அரசு கூறவில்லை போர்க்குற்ற விசாரணைக்குகூட இதுவரை இந்திய அரசு ஜநா வில் ஆதரவு தெரிவிக்கவில்லை. அந்த இந்திய அரசின் முக்கிய அமைச்சர் அமிர்த்ஷா இலங்கையில் நடந்தது “இனப்படுகொலை” என்று முதன் முறையாக சொல்லியுள்ளார். இது இந்திய அரசின் மிகப் பெரிய மாற்றம். இருந்தும் தமிழக தலைவர்களோ ஏன் ஈழத் தமிழ்த் தலைவர்கள்கூட இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஏனெனில் இந்திய அமைச்சர் இதனை பாராளுமன்றத்தில் கூறவில்லை. ஜநா வில் கூறவில்லை. மாறாக தமிழ் நாட்டில் அதுவும் ராமேஸ்வரத்தில் கூறியுள்ளார். காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு இவ் இனப்படுகொலையில் பங்கு இருப்பதால் இதனைக் கூறுவதன்மூலம் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவே அமைச்சர் இவ்வாறு பேசியதாக பலரும் கருதுகின்றனர். அடுத்த வருடம் தேர்தல் வர இருக்கிறது. அதற்கு முன்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பலவீனப்படுத்த பாஜக அரசு முனைகிறது. அதனால் எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் திமுக விற்கு பல நெருக்கடிகளை கொடுக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த “இனப்படுகொலை” என்ற அமைச்சரின் பேச்சு. ஆனாலும் ஈழத் தமிழத் தலைவர்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய பாராளுமன்றத்தில் இந்திய அரசு மூலம் நடந்தது இனப்படுகொலை என தீர்மானம் கொண்டுவர முயல வேண்டும். இந்திய அரசு இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுமாயின் அதனைப் பயன்படுத்தி தமிழருக்கு சாதகமான பல விடயங்களை சர்வதேச அளவில் செய்ய முடியும்.

No comments:

Post a Comment