Wednesday, February 28, 2018

எமது எதிரிகளும் துரோகிகளும் இறக்கும்போது

•எமது எதிரிகளும் துரோகிகளும் இறக்கும்போது
எம்மால் மகிழ்ச்சியடைய முடியுமே தவிர
பேரிழப்பு என்று இரங்கல் தெரிவிக்க முடியாது!
எதிரி உயிரோடு இருக்கும்வரை செத்தப் போ என்று திட்டுவதும் அந்த எதிரி செத்ததும் நாகரீகம் என்ற பெயரில் பேரிழப்பு என்று இரங்கல் தெரிவிப்பதும் நமது தலைவர்களின் வழக்கமாக இருக்கிறது.
ராஜீவ் காந்தி உயிரோடு இருக்கும்வரை அவரைத் திட்டிய வீரமணி அவர் கொல்லப்பட்டதும் “இளம் தலைவர் மரணம். இந்தியாவிற்கு பேரிழப்பு” என்று எழுதினார்.
இப்போது காஞ்சி சங்கராச்சாரியார் மரணம் அடைந்ததும் அதே வீரமணி அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த காஞ்சி ஜெயேந்திரர்,
தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழன் சொத்தை தின்னுகிட்டு தமிழை நீஷ மொழி (கேவலமான) என்றார்
வேலைக்குச் செல்லும் பெண்களை விபச்சாரிகள் என்றார். அதுமட்டுமன்றி தலித்துகள் எந்த சோப்பு போட்டுக் குளித்தாலும் தீட்டு போகாது என்றார்.
பார்ப்பணர்களின் தலைவராக இருந்துகொண்டு காலம் எல்லாம் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதிராக செயற்பட்டுவந்த ஜெயேந்திரரின் மரணம் குறித்து உண்மையான தமிழன் மகிழ்வுதானே கொள்ள முடியும்.
அதைவிடுத்து நாகரீகம் என்று அவருக்கு இரங்கல் தெரிவிப்பது என்ன நியாயம்?
ஆனால் அதேவேளை தமிழருக்காக போராடிய தோழர் தமிழரசனும் அவரது தோழர்கள் நான்கு பேரும் உளவுப்படையினால் அடித்துக் கொல்லப்பட்டபோது இந்த தலைவர்கள் ஒருவர்கூட நாகரீகம் கருதிக்கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.
அப்போது எங்கையடா போச்சு உங்கட அரசியல் நாகரீகம்? போங்கடா நீங்களும் உங்கள் அரசியல் நாகரீகமும்.
ஒரு போலிச் சாமிக்கு, ஒரு பார்ப்பண திமிர் பிடித்த கொலைகாரனுக்கு உங்களைப்போல் எம்மால் இரங்கல் தெரிவிக்க முடியாது
உண்மையை சொல்வதானால் எதிரி இறந்தால் எமக்கு வருவது மகிழ்ச்சியே!

No comments:

Post a Comment